சிறுவனை உண்பதற்காக சுற்றிவளைத்த சுறாக்கள்: வைரலாகும் அதிர்ச்சிக் காட்சிகள்..!! (வீடியோ)

Read Time:3 Minute, 40 Second

பஹாமாஸ் நாட்டின் கடற்கரை ஒன்றில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் கரையோரமாக நீருக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை உண்பதற்காக நான்கு சுறாக்கள் சுற்றிவளைப்பதே அந்த சம்பவமாகும்.

முழங்கால் அளவு தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுவனை நோக்கி நான்கு சுறாக்கள் சுற்றிவளைத்து வருகின்றன.

சுறாக்கள் வருவதை அறியாத சிறுவன் தண்ணீரில் தொடர்ந்தும் விளையாடிக்கொண்டிருக்கின்றான். பின்னர் கரையை நோக்கி வேகமாக ஓடி தப்புகின்றான்.

நடந்தது என்ன?

ஆர்டெம் டக்கென்ப்கோ (Artem Tkachenko) எனும் புகைப்படக் கலைஞர் குறித்த கடற்கரையின் அழகினை தனது உலங்கு ஒளிப்படக்கருவி மூலம் (Deron Camera) பதிவாக்கிக்கொண்டிருந்தார். அதன்போது குறித்த சிறுவன் கடலின் கரையிலிருந்துவிட்டு தனது இடுப்பளவு தண்ணீருக்குள் விழுந்து நீந்துகிறான்.

சிறுவனை உண்பதற்காக சுற்றிவளைத்த சுறாக்கள்: வைரலாகும் அதிர்ச்சிக் காட்சிகள்!

இவ்வாறு நீந்திக்கொண்டிருந்த சமயம் நான்கு சுறாக்கள் குறித்த சிறுவனை வேட்டையாடுவதற்காக அவனை நோக்கி சுற்றிவளைத்து நகர்கின்றன.

இதனை கண்ணுற்ற ஆர்டெம் சிறுவனை நோக்கி கத்துகிறார். உடனடியாக கரைக்கு வருமாறு கூச்சலிடுகிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் உடனடியாக கரையை நோக்கி ஓடுகிறான். சிறுவனுக்கு மிக அண்மையில் வந்த சுறா திரும்பிவிடுகிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த ஆர்டெம், தனக்கு இவ்வாறான சந்தர்ப்பத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி என்றார்.

ஆர்டெம் உலகின் முக்கியமான காட்சிகளை படமாக்கிவரும் ஒரு புகைப்படவியலாளராவார்.

அந்த வகையிலேயே உலகின் புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்றான பஹாமஸ் கடற்கரையையும் படமாக்கியுள்ளார்.

பஹாமஸ் கடற்கரையில் ஏராளமான சுறாக்கள் வந்து செல்கின்றன. இவற்றிற்கு மனிதர்கள் உணவளிப்பதால் மனிதர்களுடன் பழகும் தன்மை கொண்டவை எனச் சொல்லப்பட்டாலும் சர்ச்சைக்குரிய விடயமாகவே இன்றுவரை நிலவுகின்றது.

குறித்த சிறுவனை நாங்கு சுறாக்களும் சுற்றிவளைத்தமையானது அவற்றின் இயல்பான வேட்டைக் குணத்தினையே காட்டுவதாக ஆர்டெம் கூறினார்.

அவரது உலங்கு ஒளிப்படக் கருவியில் அந்தச் சம்பவம் படமாக்கப்பட்டிருக்காவிடில் குறித்த சிறுவனை நான்கு சுறாக்களும் இணைந்து வேட்டையாடியிருக்கும் என கடற்கரையிலிருந்த ஏனைய மனிதர்கள் தெரிவித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் பீட்சா..!!
Next post ஒரே நாளில் மூன்று பெண்களை திருமணம் செய்த நபர்: காரணம் என்ன தெரியுமா?..!! (வீடியோ)