தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது..!!

Read Time:2 Minute, 58 Second

ஒவ்வொருவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறது, ஓர் ஆய்வு. குறைந்த செலவில் எளிதில் கிடைக்கும் பரத உணவு முட்டை மட்டுமே. அதேநேரம் எனக்கு முட்டை பிடிக்கும் என்று நான்கு, ஐந்து முட்டைகளை சாப்பிடக்கூடாது. எதுவும் அளவோடு சாப்பிட்டால் பயன் உண்டு. ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.

முட்டையை அவித்தோ, பொரித்தோ சாப்பிடலாம். அல்லது முட்டைக் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். எல்லா வகையிலும் அவித்த முட்டையே சாலச்சிறந்தது. கிராமங்களில் உள்ள அனைவரின் வீட்டிலும் கோழி வளர்ப்பார்கள். கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. முட்டையை எவ்வாறு சமைத்து சாப்பிட்டாலும் கலோரிச்சத்துகள் குறைவதில்லை. இதில் 60 கலோரி, முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும். சிலருக்கு மஞ்சள் கரு மட்டும் பிடிக்கும், ஆனால் முட்டையை வெள்ளை, மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிடுவது தான் நல்லது.

தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அதன் வெள்ளைக் கருவை மட்டும் கொடுக்க வேண்டும். பின்னர் சிறிது சிறிதாக அவர்களுக்கு மஞ்சள் கருவை கொடுக்கலாம்.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை. மாமிசம், சீஸ் போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை. முட்டை அப்படியல்ல. முட்டையை கடையில் வாங்கி வந்தவுடன் அது உடைந்து போய் இருந்தால் அன்றே உபயோகித்துவிட வேண்டும். தினம் ஒரு முட்டை உண்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடைசியாக அரசியல் படம் ஒன்றில் நடிக்கும் ரஜினிகாந்த்?..!!
Next post 27 பெண்களுக்கு நபர் செய்த கேவலமான வேலை!! பின் நடந்த விபரீதம்..!!