விம்பிள்டன் டென்னிசில் சூதாட்டம்?

Read Time:2 Minute, 39 Second

இந்த ஆண்டு நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி களில் பங்கேற்கும் 18 வீரர்களுக்கு டென்னிஸ் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்ததை தொடர்ந்து தற்போது டென்னிஸ் போட்டிகளிலும் சூதாட்டம் நடப்பதாக புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்ற தாக புகார் எழுந்தது. தற்போது இந்த ஆண்டு நடைபெறவுள்ள விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்க உள்ள 18 வீரர்களுக்கு டென்னிஸ் சூதாடிகளுடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் 4 ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் உள்பட 8 ஆட்டங்களில் சூதாடிகளின் மூலமாக ஆட்டத்தின் முடிவு நிர்ணயிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று “தி டைம்ஸ்’நாளேடு தெரிவித்துள்ளது. இந்த போட்டிகளில் தோல்வியை தழுவிய 5 வீரர்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ள விம்பிள்டன் போட்டிகளிலும் பங்கேற்கின்றனர். சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு உடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 18 வீரர்கள் இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் பங்கேற்பதாகவும், இவர்களில் ரஷ்யா, ஸ்பெயின், அர்ஜென்டினா, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா வீரர்கள் அடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை சூதாட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீரர்கள் தங்கியுள்ள அறைகளுக்கு அவர்களது பயிற்சியாளர்கள் மட்டுமே சென்றுவரக்கூடிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆர்யா படப்பிடிப்பில் விபத்து: 2 பேர் பலி
Next post சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்..