இங்கிலாந்தில் உள்ள டண்டி நகரில் புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு வாரம் ரூ.875 உதவிதொகை

Read Time:1 Minute, 48 Second

இங்கிலாந்தில் உள்ள டண்டி நகரில் புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிடச் செய்யவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வாரத்துக்கு 875 ரூபாய் வழங்குவதற்கு அந்த நகர நிர்வாகம் முன்வந்து உள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள அந்த நகரத்தில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள 900 பேரையும் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடச் செய்வதற்காக ரூ.3 கோடி செலவில் ஒரு திட்டத்தை அந்த நகர நிர்வாகம் வகுத்து உள்ளது. அதன்படி 900 பேருக்கும் வாரம் 875 வீதம் 12 வாரங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை பணமாக வழங்கப்படமாட்டாது. எலக்ட்ரானிக் கார்டாக தான் வழங்கப்படும். இதை பயன்படுத்தி அவர்கள் உணவுபொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கிக்கொள்ளலாம். மதுபானங்கள், சிகரெட்டுகளை அவர்கள் வாங்க முடியாது. புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடச் செய்வதற்காக அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்படும். அதோடு அவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை தொடரவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் வாராந்திர உடற்பரிசோதனையும் அவர்கள் செய்து கொள்ளவேண்டும். இந்த திட்டம் வெற்றி பெற்றால், இது ஸ்காட்லாந்து நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 ஆண்டுகளில் உலக சுற்றுப்பயணம் முடித்து திரும்பிய பாட்டி
Next post ஆர்யா படப்பிடிப்பில் விபத்து: 2 பேர் பலி