புயல் தாக்கியதில் 229 பேர் பலி; 740 பேருடன் கப்பல் மூழ்கியது பயணிகள் கதி என்ன?

Read Time:3 Minute, 40 Second

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கியதில் 229 பேர் பலியானார்கள். கடலில் 740 பேருடன் சென்ற கப்பல் மூழ்கியது. இதில் 4 பேர் பலியானார்கள். மற்றவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டை பெங்ஷென் என்ற புயல் தாக்கியது. அப்போது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த புயல் தாக்கியபோது பிரின்சஸ் ஆப் ஸ்டார்ஸ் என்ற கப்பல் 626 பயணிகளோடும், 121 சிப்பந்திகளோடும் ரொம்ப்ளான் மாநிலத்தில் உள்ள சிபுயான் தீவு அருகே கடலில் சென்றது. அப்போது காற்று மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசியதால் கப்பல் கடலில் அலைக்கழிக்கப்பட்டது. இந்த நிலையில் கப்பல் என்ஜின்கள் செயல் இழந்தன. இதனால் கப்பல் கடலில் மூழ்கத்தொடங்கியது. கப்பலில் இருந்த 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். மற்றவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த கப்பல் மணிலாவில் இருந்து செபு என்ற இடத்துக்கு சென்றபோது தான் அது புயலில் சிக்கிக்கொண்டது. அதிகாலை 5 மணிக்கு கப்பல் கேப்டன் பயணிகளிடம், கப்பல் பயனற்று போய்விட்டதாகவும், வேறு கப்பலில் பயணம் செய்யும்படியும் அறிவித்தார். வேறு கப்பல் எது என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்று கப்பலில் இருந்து தப்பித்த சிலர் தெரிவித்தனர். உயிர்காக்கும் படகுகளும் காற்றில் உடைந்து போய்விட்டன என்றும் அவர்கள் கூறினார்கள். பகல் 12.30 மணி அளவில் கப்பலுடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக கப்பல் கம்பெனி அறிவித்தது.

50 சிறுவர்கள்

கப்பல் பயணிகளில் 50 பேர் சிறுவர்கள் ஆவார்கள். அவர்களின் பிளாஸ்டிக் காலணிகள் கடலில் மிதந்தன. இதனால் அவர்கள் பலியாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இறந்தவர்களில் 4 பேரின் உடல்கள் கரையில் ஒதுங்கிக்கிடந்தன. அவர்களில் 2 பேர் கணவன், மனைவி ஆவார்கள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி இருந்தனர்.

கடலில் மூழ்கிய கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்காக மீட்புப்படகுகள் அனுப்பப்பட்டன. ஆனால் அவை கப்பல் மூழ்கிய இடத்தை அடைய முடியவில்லை.

தண்ணீரில் மிதக்கும் நகரங்கள்

இந்த புயல் காரணமாக இல்லோய்லோ மாநிலத்தில் 101 பேர் பலியானார்கள். பக்கத்து மாநிலங்களில் 128 பேர் பலியானார்கள். இல்லோய்லோ மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கடல் போல நகரங்கள் காட்சி அளிக்கின்றன என்று கவர்னர் நீல் டுபாஸ் தெரிவித்து இருக்கிறார்.

பெங்ஷென் புயல் இந்த ஆண்டில் பிலிப்பைன்சை தாக்கும் 6-வது புயல் ஆகும். அது தைவான் நாட்டை நோக்கி நகர்ந்து சென்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மக்கள் வருமானத்தின் நான்குவீதம் ஜனாதிபதியின் செலவீனம்
Next post ஈராக்கில் பெண் தீவிரவாதியின் தற்கொலை தாக்குதலில் 16 பேர் பலி