வழவழப்பான அழகான கால்களுக்கு டிப்ஸ்…!!

Read Time:2 Minute, 27 Second

கால்கள் சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு வசீகரமாகத்தான் இருக்கும். கால்களிள் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி, அழகான கால்களாக மாற்ற இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் யோகார்ட், ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து கால்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் கால்களில் இருக்கும் இறந்த செல்கள் அகற்றலாம். விடாப்படியான தழும்புகளும் மறையும்.

கோதுமை மாவு சருமத்தை இறுக்கிப் பிடிக்கும். இதனால் அதிகப்படியான சதைகள் கட்டுப்படும். போதாதற்கு அழுக்குகளை நீக்கவும் சிறந்தது. 1 டீஸ்பூன் கோதுமை மாவு எடுத்து, அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கால்களில் தேய்க்கவும். நன்றாக காய்ந்ததும் கழுவ வேண்டும்.

கால்களில் இருக்கும் சருமம் மென்மையாக இருப்பதால் அதில் குளிர்காலத்தில் சதுர சதுரமாக வறண்டு போன கோடுகள் தெரியும். இதனை தவிர்க்க, ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சினால் நனைத்து கால் முழுக்க தடவுங்கள். இரவில் அவ்வாறு செய்து விட்டு படுக்கவும். இதனால் கால்களில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.

கடைகளில் அவகாடோ எண்ணெய் விற்கும். அதனை வாங்கி கால்களில் தினமும் காலை மாலை என இரு வேளை தடவி வாருங்கள். மென்மையான பளபளவென கால்கள் கிடைக்கும்.

புதினா சாறை எடுத்து கால்களில் தடவினால் கால்களில் உண்டாகும் கருமை, சொரசொரப்பு நீங்கி, மென்மையான கால்களைப் பெறுவீர்கள். முட்டிகளும் தேய்த்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?..!!
Next post பட வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் பலூன் இயக்குனர்..!!