சீனாவில் ஒலிம்பிக் தொடங்கும் நாளில் 9 ஆயிரம் திருமணம்: இப்போதே முன்பதிவு நடக்கிறது

Read Time:1 Minute, 9 Second

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி ஒலிம்பிக்போட்டிகள் தொடங்குகின்றன. மேலும் சீனர்களின் அதிர்ஷ்ட எண் 8 ஆகும். எனவே இந்த நாளை, தங்களின் வாழ்நாளின் முக்கியமான தினமாக கருதும் சீன இளைஞர்கள் தங்களது திருமணம் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நாளில்தான் நடக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக, ஆகஸ்டு 8-ந்தேதி திருமணம் செய்து கொள்வதற்காக இப்போதே ஆயிரக்கணக்கான ஜோடிகள் தயாராகி விட்டனர். இவர்கள் திருமணப் பதிவு அலுவலகங்களில் நேற்று முதல் தங்களின் திருமண நாளை முன் பதிவு செய்ய தொடங்கியிருக்கிறார்கள். மொத்தம் 9 ஆயிரம் சீன ஜோடிகள் ஆகஸ்டு 8-ந்தேதி திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தாலியில் உயிரிழந்த இலங்கையருக்கு பதிலாக வெளிநாட்டவரின் சடலம்
Next post ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதவியை ராஜினாமா செய்வேன்: சர்வதேச அணுசக்தி கழக தலைவர் தகவல்