குழந்தைகளின் எலும்புகளுக்கு வலுசேர்க்கும் மசாஜ்..!!

Read Time:2 Minute, 46 Second

பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது. அது குழந்தைகளின் சருமத்துக்கும், எலும்புகளுக்கும் வலுசேர்க்கும். உடல் எடை கூடவும், உடல் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

* மசாஜ் செய்வதற்குரிய எண்ணெய்யை பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்யத் தொடங்க வேண்டும். கைவிரல்களின் அழுத்தம் மென்மையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் எலும்பு பகுதிகளும், இணைப்பு பகுதிகளும் வலிமையாக இருக்காது.

* மூக்கு, காது மடல்களை மென்மையாக வருடிவிட வேண்டும்.

* இரு கைகளையும் மார்பு பகுதியில் வணங்குவது போல் குவித்து வைத்து மெதுவாக நீவி விட வேண்டும்.

* வயிற்று பகுதியில் மசாஜ் செய்யும்போது அடி வயிற்றில் கையை வைத்து கடிகார முட்கள் சுழலுவது போல் மெதுவாக அழுத்திவிட வேண்டும்.

* குழந்தையின் முட்டியையும், பாதங்களையும் பிடித்தபடி வயிற்றை நோக்கி லேசாக அழுத்த வேண்டும்.

* தொடை பகுதியில் இருந்து உள்ளங்கால் வரை நீவி விட வேண்டும்.

* தோள்ப்பட்டையில் இருந்து உள்ளங்கை வரைக்கும் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

* குழந்தையின் மணிக்கட்டை அனைத்து திசைகளிலும் மெதுவாக திருப்பி மசாஜ் செய்து விட வேண்டும்.

* குழந்தையின் உள்ளங்கால்களில் பெருவிரலைக் கொண்டு லேசாக நீவ வேண்டும்.

* குழந்தையின் கால்களின் பத்து விரல்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை கொண்டு மெதுவாக வருடிவிடுங்கள்.

* இறுதியில் குப்புற படுக்கவைத்து விரல் நுனிகளால் குழந்தையின் முதுகெலும்புகளை மேலிருந்து கீழாக மெதுவாக நீவி விட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து குழந்தைகளுக்கு மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டம் மேம்படும். செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினையும் ஏற்படாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள்! ரசிகர்களின் அமர்க்களம்..!! (வீடியோ)
Next post திரையுலக பயணத்தில் 2017 முக்கியமான ஆண்டு – காஜல் அகர்வால்..!!