உடலுறவுக்குப் பின்னும் மனைவி சுயஇன்பம் செய்து உச்சக்கட்டத்தை அடைவதை தடுக்க முடியாதா?..!!
நானும் என் மனைவியும் பத்து வருடங்களாக மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். உடலுறவின்போது என் மனைவி இதுவரை உச்சக்கட்டத்தை அனுபவித்ததில்லை.
கடந்த சில வருடங்களாக உடலுறவுக்கு முன்பு, உச்சக்கட்டத்தை அடைவதற்காக என் முன்னிலையில் சுய இன்பம் அனுபவிக்கிறாள். அவளது தோழிகள் அனைவரும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதாகவும், தான் மட்டுமே ஏமாற்றப்படுவதாகவும் சில காலமாக அவள் என் மீது குற்றம் சாட்ட ஆரம்பித்திருக்கிறாள்.
எனக்கும் அது குற்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. என் மனைவி திருப்திகரமான உச்சக்கட்டத்தை அடைந்தாள் என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது? விருப்பமான ஆணைப் பற்றி கற்பனை செய்து கொள்ள உற்சாகப்படுத்தினால் பெண்களால் உச்சக்கட்டத்தை அடைய முடியும் என்பது உண்மையா?
பெண்ணின் உச்சநிலை என்பது ஆணின் பேச்சு, வாசனை, தொடுகை, அன்பு, அணுகுமுறை மாதிரியான பல சமாசாரங்களைப் பொறுத்த ஒரு நிகழ்வு. இவற்றைத் தவிர அவளது தேவைகள், எதிர்பார்ப்புகள், மனநிலை மாதிரியான விஷயங்களும் அவள் உச்சநிலையை நிர்ணயிக்கின்றன.
உங்கள் மனைவியின் தேவைகள் என்னென்ன என்பதை முதலில் அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவள் சொல்லத் தயங்கினாலும், உற்சாகப்படுத்தி, “தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டேன்“ என்கிற உத்தரவாதம் தந்து பேசச் செய்யுங்கள். உங்கள் மனைவியின் தேவைகளையும் ஆசைகளையும் அறிந்து, அவற்றை நிறைவேற்றி வைத்தாலே, அவளை உச்சக்கட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிடலாம்.
பாலுறவின்போது ஒவ்வொரு பெண்ணின் தேவையும் வேறுபடும். உச்சத்தைத் தொட சில பெண்களுக்கு காதுமடல் ஸ்பரிசம் தேவையாக இருக்கும். சிலருக்கு இறுக்கி அணைத்துக்கொள்ள வேண்டுமெனத் தோன்றும். சில பெண்களுக்கு அழுத்தமான முத்தம் தேவைப்படலாம்.
இந்தத் தேவைகளைப் புரிந்துகொள்ளாமல், அவசர அவசரமாக உறவில் ஈடுபடுகிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள்.
ஆணின்உடல், காமத்துக்கு வெகு விரைவில் தயாராகிவிடும். ஆனால், பெண்ணின் உடல் தயாராக அதிக நேரம் தேவைப்படும். அடுப்பில் வைக்கப்பட்ட நீர், மெல்ல மெல்லச் சூடேறி கொதிநிலைக்கு வருவதுபோல, முன் விளையாட்டுகள் மூலம் பெண்ணின் மனத்தையும், உடலையும் காமக் கொதிநிலைக்கு நீங்கள்தான் கொண்டுவர வேண்டும். அந்தக் கொதிநிலையில் கூடினால்தான் அவளால் உச்சக்கட்டத்தை அடைய முடியும்.
இப்படி அவள் முழுமையாகத் தயாராவதற்குக் காத்திராமல், உங்களது தேவையை மட்டும் நிறைவேற்றிக் கொண்டீர்களாக என்றும் யோசியுங்கள். முன் விளையாட்டு என்றில்லை. அவள் எதிர்பாராதபோது ஒரு முத்தம், ஓர் அணைப்பு, ஒரு குறும்பு ஸ்பரிசம், கேலிப் பேச்சு, குறுகுறு பார்வை, ரகசியச் சிரிப்பு என்று ரொமான்ஸில் கலக்கினால்கூட போதும்.
உங்கள் அகவாழ்வை இப்படி அக்கு வேறு, ஆணி வேறாக அனலைஸ் செய்து பாருங்கள்.
பெண் என்கிற பிறவிக்குக் காமக்கிளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் அந்த ஆண் நிறைய ஹோம்ஒர்க் செய்து அவளைத் தயார்ப்படுத்த வேண்டும். அந்த அதிமுக்கியமான ஹோம்ஒர்க் என்னென்ன தெரியுமா?
1. அவளைப் பேச விட வேண்டும். (பெண்ணின் மூளையில் மொழிக்கான மையம் ரொம்பப் பெரிசு என்பதால் பேசினால் ஒழிய அவளுக்கு மனசு ஆறாது!)
2. அவளோடு நிறைய பேசுங்கள் (ஒரு பெண்ணின் மனதை அடைய சிறந்த வழி அவளது காதுகள்தான்!) கேலியாக, ஹாஸ்யமாக, புத்திசாலித்தனமாக, அன்பாக, கொஞ்சலாக, கொஞ்சமே கொஞ்சம் ஆபாசமாகப் பேசி அவளை செட் பண்ணிவையுங்கள்.
3. அவள் வேலைகளில் உதவுங்கள் – படுக்கைக்கு வெளியே நீங்கள் அவளை ஒரு மிஷின் மாதிரி நடத்தினால் படுக்கைக்கு வந்த பிறகும் அவள் இயந்திரத்தனமாகச் செயல்படுவாள் என்பதால் எல்லா சந்தர்ப்பத்திலும் அவள் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொண்டு அவளை ஒரு மனுஷி மாதிரி நடத்திப் பாருங்கள் – படுக்கையில் அவள் மோகினியாக மாறுவாள்!
4. புணர்ச்சி அல்லாத ஸ்பரிசங்கள் அவள் ஆசையைக் கிளறவல்லவை என்பதால் சந்தர்ப்பம் கிடைக்கும்போதும் (கிடைக்காதபோது ஏற்படுத்திக் கொண்டும்) அவளைத் தொட்டுத் தொட்டு ஸ்ருதி சேர்த்து வையுங்கள்.
5. படுக்கைக்கு வந்ததும் காய்ந்த மாடு கம்பில் பாய்ந்தது மாதிரி டமால் டுமீலென்று வேகவேகமாக அவளை அணுகாமல் நிதானமாக அவளைத் தொட்டு, ரசித்து, விளையாடி மோகத்தைத் துாண்டுங்கள். பிறகு பாருங்களேன் உங்கள் மனைவியின் ரியாக்ஷனை!
Average Rating