ஆப்கன் குண்டு வெடிப்பில் 4 யு.எஸ். வீரர்கள் பலி

Read Time:1 Minute, 18 Second

ஆப்கனில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அமெரிக்கப் படையை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்தனர். இத்தகவல் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தஹார் நகரில் பாதுகாப்புப் பணியில் இருந்த அமெரிக்க வீரர்களை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 4 வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலில் 2 வீரர்கள் காயமடைந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த வாரம் அமெரிக்க படைகள் நடத்திய வேட்டையில், 12-க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும், தீவிரவாதிகள் நடத்திய வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 31 வீரர்கள் இறந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட இலங்கை மோதல்கள்
Next post நேபாள அரசில் யாருக்கு எந்தப் பதவி?: தலைவர்கள் ஆலோசனை