கல்லீரலை நாம் சுத்தம் செய்வது எப்படி?..!!

Read Time:5 Minute, 29 Second

ஒரு நல்ல கார் உங்களிடம் இருந்தால் அதனை எப்படி எல்லாம் பாதுகாப்பீர்கள். சர்வீஸ் செய்வீர்கள். எண்ணெய் மாற்றுவீர்கள். என்னென்ன தேவையோ அதையெல்லாம் செய்வீர்கள். அது போலத்தான் நம் உடம்பின் உறுப்புகளை நாம் காக்க வேண்டும். சரியான சத்து, பராமரிப்பு, கழிவுப் பொருள் நீங்குதல். இவை அனைத்தும் சரியாக இருந்தால் நோய் என்ற பேச்சே இருக்காதே. நம் உடலில் கழிவுகளை நீக்குவதில் கல்லீரலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ரசாயனம், வைரஸ், கிருமி என ஏற்படும் தாக்குதல்களிலிருந்து கல்லீரலும் நம்மை காக்கின்றது.

நல்ல சத்துகளும் சரி, நச்சுகளும் சரி கல்லீரலை தாண்டியே செல்ல முடியும். கல்லீரல் நம் உடலுக்கு எது நல்லது. எது நீக்கப்பட வேண்டும் என்பதனை அறிந்து அதன் படி வேலை செய்கின்றது. காரில் வடிகட்டிகளை நாம் சுத்தம் செய்கின்றோம். மாற்றுகின்றோம். உடலில் நம் உறுப்புகளை நாம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் காலப்போக்கில் அவ்வுறுப்பு பாதிக்கப்படும். பாதுகாப்பான முறையில் நம் கல்லீரலை நாம் எப்படி சுத்தம் செய்து கொள்வது என்பதனை அறிவோம்.

* தண்ணீர்: நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். ஆக தேவையான அளவு நீர் குடிப்பது என்பது தான் உசிதமானது. பலர் தனக்கு தேவையான அளவு நீர் குடிக்கும் பழக்கம் இல்லாது இருக்கின்றனர். கல்லீரலுக்கு தேவையான அளவு நீர் இருந்தாலே நச்சுகளை, கழிவுகளை நீக்கவும், சத்துக்களை உடலுக்கு அனுப்பவும் எளிதாக இருக்கும்.

* எலுமிச்சை: இயற்கையின் மிக அரிய பரிசு இது. ஒரு பாட்டில் நீரில் 2-4 டீஸ்பூன் எலுமிச்சை சாறினை கலந்து சாதாரண நீர் போல் பருகிக் கொண்டே இருக்கலாம். சிறிது நாளிலேயே நீங்கள் சக்தியுடன், ஆரோக்கியமாக இருப்பதனை உணர்வீர்கள். ஆனால் இதனை பல்லில் படாமல் குடிப்பது நல்லது.

* மஞ்சள்: மஞ்சளை சமையலில் பயன்படுத்துவதும், பாலில் ¼ டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து அருந்துவதும், அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் மஞ்சள் காப்ஸ்யூல் எடுத்துக் கொள்வதும் வீக்கங்களை குறைத்து கிருமிகளை நீக்கி விடும்.

* பூண்டு: பூண்டு போன்ற கிருமி நாசினியை பார்ப்பதே கடினம் என்கின்றனர். சமைத்தோ, வேக வைத்தோ, நசுக்கியோ இதனை பயன்படுத்துவது உடலினை அநேக விதங்களில் பாதுகாக்கும்.

* ஆப்பிள்: இதற்கு பல காலமாக மருத்துவ உலகில் மிகப்பெரிய மதிப்பு உண்டு. இதிலுள்ள சத்துகளே இதற்கு காரணம். ஜீரண சக்திக்கு உதவுவது. இது கல்லீரல் தன் வேலையைச் செய்ய நன்கு உதவுகின்றது.

* முழுதானியங்கள்: அதிக நார்சத்து கொண்ட இவை கல்லீரல் நச்சுப் பொருட்களை நீக்க பெரிதும் உதவியாய் உள்ளது.

* க்ரீன் டீ: தினமும் ஒரு முறை க்ரீன் டீ குடித்தால் கூட போதும். கல்லீரலில் ஆபத்தான கொழுப்பு சேருவது வெகுவாய் தடுக்கப்படும்.

* வால்நட், பீட்ரூட், காரட், பச்சை இலை, காய்கறிகள் கல்லீரலை காக்கும்.

எதனையும் செய்யாமல் இருப்பது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு அதிகமாய் செய்வதும். முதலில் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று அளவான முறையில் மேற் கூறியவைகளை கடை பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முறையான நல்ல ரத்த ஓட்டம்: உங்களை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைக்கும். இல்லாவிடில் உடலில் நச்சுகள் தேங்கி அனைத்து நோயினையும் வரவழைக்கும்.

* உங்கள் கொலஸ்டிரால் நல்ல கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

* கண்கள் நன்கு தெரிய வேண்டும்.

* இருதயம் பாதிப்பின்றி இருக்க வேண்டும்.

இப்படி அனைத்து நலன்களும் உடல் பெற, உடலுக்கு ‘நைட்ரின் ஆக்ஸைட்’ அவசியம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு 10 வருடம் நம் வாழ்வில் 10 சதவீத நைட்ரிக் ஆக்ஸைட் குறைவதே நம் உடலில் பல பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணம் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலா இயக்கத்தில் நடிக்கிறாரா ஷரத்தா ஸ்ரீநாத்?..!!
Next post 28 வாலிபரை திருமணம் செய்த பெண்: கள்ளக்காதலனே தீர்த்துக்கட்டிய சம்பவம்..!!