சிந்திப்பதிலும் ஆண், பெண் வேறுபாடு!

Read Time:1 Minute, 45 Second

சிந்திப்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் சிந்திக்கும்போது, மூளையில் உள்ள நூற்றுக்கணக்கான மரபீனிகள் செயல்படத் துவங்குகின்றன. இந்த செயல்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கு மரபீனிகள் ஒரே அமைப்பில்தான் இருக்கும் என்றாலும், மூளையில் இவற்றின் செயல்படும் திறன் வேறுபட்ட அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. திறமை, சிந்திக்கும் ஆற்றல் ஆகியவையும் இதனால் வேறுபடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். துணிச்சலாக முடிவெடுப்பது, துணையைத் தேடிச் செல்வது என எல்லாவற்றிலும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. பொதுவாகவே இளமைக்கும், நல்ல தோற்றத்துக்கும் ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், சமூக அந்தஸ்துக்கு பெண்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களுக்கு மன அழுத்தம், அல்ஸீமர் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதற்கும் இந்த வேறுபாடுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள்; ஈ.பி.டி.பி – டி.எம்.வி.பி. பரஸ்பர பழிசுமத்தல்
Next post இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான “ஆயுர்வேதம்” லண்டன் மக்களிடையே மிகுந்த வரவேற்பு