மார்பகங்கள் சிறிதாக இருந்தால் தாம்பத்தியத்துக்குப் பிரச்னையா?..!!

Read Time:2 Minute, 36 Second

மார்பகங்கள் மிகவும் சிறியதாக இருப்பது ஒரு பிரச்னையா? அதற்கும் தாம்பத்திய உறவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

பெண்ணின் மார்பகம் என்பது நான்கு முக்கிய பணிகளுக்கான உறுப்பு.

1.“இதனை உடைய இவள் ஒரு பெண்“ என்று அறிவிக்கும் பாலியல் சமிக்ஞை. ஆனால், இவள் பெண் என்று சொல்ல வேறு பல சமிக்ஞைகளும் உள்ளனவே – உடை, ஒப்பனை, ஆபரணம், நடை, பாவனை என்று.

2. ஆணின் இனவிருத்தி வேகத்தைத் துாண்டும் ஒரு அம்சம். பலர் நினைக்கிறார்கள், எல்லா ஆண்களுக்குமே கொழுத்த மார்பகங்கள்தான் பிடிக்கும் என்று. அப்படி இல்லை. சிறுவயதில் பற்றாக்குறை, பட்டினி, பிரிவு, நிராகரிப்பு போன்றவற்றை அனுபவித்த ஆண்களுக்கு சராசரிக்கும் மிகுதியான அளவும், சிறுவயது முதல் செழிப்பாகவே வாழ்ந்தவர்களுக்கு சராசரி அளவும், நேர்த்தியான சிந்தனைவாதிகளுக்கு சராசரிக்கும் சிறிய அளவும் பிடித்திருப்பதாகத்தான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3. பால் உற்பத்தி செய்து புகட்டுவது. மார்பகத்தின் அளவுக்கும் பால் உற்பத்தித் திறனுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை.

4. காம உணர்வுகளைக் கிரகித்துக்கொள்ளும் கூடுதல் ஸ்பரிச உணர்வு சக்தி பெற்ற பாகம் என்பதால் பெண்ணின் மோகத்தைத் துாண்டுவதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. பரப்பளவு அதிகமானால் நரம்பின் ஸ்பரிச உணர்திறன் குறைந்துவிடும் என்பதால் இளைத்த மார்பகங்களைக் கொண்டவர்களுக்கு எளிதில் மோக உணர்வுகள் ஏற்பட்டுவிடுகின்றன. பருமனான பெண்களுக்கு இத்தகைய உணர்வுகள் தாமதமாக ஏற்படுகின்றன.

ஆக, பாலியல் சமிக்ஞை, ஆணின் கவர்ச்சி, பால் உற்பத்தி ஆகிய பணிகளுக்கும் மார்பகத்தின் அளவுக்கும் சம்மந்தமில்லை என்றாலும் பெண்ணின் மோகநிலைக்கும் அதற்கும் சம்மந்தம் இருக்கத்தான் செய்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் ஜூலி ஹீரோயி்னாக அறிமுகமாகும் படம்! ஹீரோ இவர்தான்..!!
Next post சுண்டியிழுக்கும் உதடுகளை பராமரிப்பது எப்படி?..!!