ரஜினிக்கு கடல் கடந்து வந்த முதல் வாழ்த்து செய்தி – அனுப்பியவர் யார் தெரியுமா?..!!

Read Time:2 Minute, 1 Second

தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ள நிலையில், முதல் நபராக ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி வரவேற்றார். அவரை தொடர்ந்து நடிகை குஷ்பூ, கஸ்தூரி, நடிகர் விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிடோர் வரிசையாக தங்களது டுவிட்டர் பக்கங்களில் மூலம் ரஜினியை வாழ்த்தி வருகின்றனர்.

ரஜினி தனது ரசிகர்களுக்கு அளித்த ‘இன்ப அதிர்ச்சியை’ தமிழக திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி, பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அனுபம் கேர் உள்ளிட்டவர்களும் தங்களது ரசிகர்களுடன் டுவிட்டர் மூலம் பரிமாறி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வாழ்த்தி வரவேற்றுள்ளார்.

’எனது தந்தை ராஜபக்சேவின் பிரியத்துக்குரிய நடிகர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு செல்கிறார். உயர்வான செய்தி. இந்த விவகாரத்தில் சினிமாவைப் போல் நிஜவாழ்க்கை ஆகிவிட கூடாது என நம்புகிறேன்.

(சிவாஜி படத்தில் வருவதுபோல்) நல்லது செய்வதற்காக அவர் சிறைக்கு போவதை பார்க்க விரும்பவில்லை. அரசியலுக்கு வருக என வரவேற்கிறேன்’ என தனது டுவிட்டர் செய்தியில் நமல் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடிபோதையில் இந்த நபர் ஆடிய ஆட்டத்தை பாருங்க….வாடி பொட்ட புள்ள வெளியே..!! (வீடியோ)
Next post சமையலுக்கு பாமாயில் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள்..!!