கார்த்திகேயனும், அவரது காதலியுடனும் இணைந்த விஜய் சேதுபதி..!!

Read Time:2 Minute, 36 Second

கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இப்படத்தை எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கியாவோஸ் விதி. தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரஸ்யமாய் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாலா.

இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில், ஒரு நாளில் நேர்கிற விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியிட இருக்கிறார்கள். இந்த டீசரை விஜய் சேதுபதி வெளியிட இருக்கிறார்.

இப்படத்தின் கதையின் நாயகர்கள் தீபக், பிளாக்பாண்டி, ஜெய்சிந்த்தும், நாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடித்துள்ளார்கள். ராஜ் பரத், இசையமைத்துள்ள இப்படத்திற்கு டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் எம்.ஏ.பாலா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.நா வாக்கெடுப்பு: மாறுபட்டுப்போகும் வெளிவிவகாரக் கொள்கைகள்..!! (கட்டுரை)
Next post ரஜினி அரசியல் வந்ததுக்காக 68 வயது மூதாட்டி போட்ட குத்தாட்டத்தை பாருங்க: முரட்டுத்தனமான ஆட்டம்..!! (வீடியோ)