உடல் எடை குறைய காரணங்கள்..!!
பொதுவாக, உடல் எடை குறைந்திருப்பது நோயாகக் கருதப்படுவதில்லை. ஆனாலும் உடல் எடை குறைவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மறதி நரம்பு தளர்ச்சி ஆகியன நேரும்.
பசியின்மை, மன அழுத்தம், உளவியல் தடுமாற்றங்கள் காணப்படும் திசுக்களின் அழிவு, முடி உதிர்தல், பற்கள் விழுதல், எலும்புகள் தேய்தல், முதுமைத்தோற்றம் விரைவில் வருதல் ஆகியன நேடும்.
ஒவ்வொருவரது பிரகிருதிக்கு தகுந்தவாறு, வெவ்வேறு காரணங்களால் உடல் எடை குறையும்.
அக்னி குறைதல், பத்திய உணவு எடுத்து கொண்டிருப்பது, அதிகமாக உண்ணா நோன்பு இருப்பது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், அதிக வேலைப்பளு, அதிக உடற்பயிற்சி ஆகியன காரணமாக எடை குறைதல் நேரலாம்.
உளவியல் ரீதியான அதிக மன வருத்தம், மன உளைச்சல், அதிகப்படிப்பு, மூளையை பயன்படுத்தி அதிக வேலை செய்தல் ஆகியவற்றாலும் எடை குறையலாம். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இப்பிரச்சினை அதிகம் வருகிறது. பொதுவாக இது வாததோஷம் மிகுவதால் வருகிறது. வாதப்பிரகிருதி உள்ளவர்கள் சரியான நேரத்துக்கு சாப்பிட மாட்டார்கள். சாப்பிட மறந்து போவார்கள்.
இந்நிலை தொடரும்போது, அக்னி குறையும். ஆகவே அக்னியை தூண்டும் மருந்துகளை எடுக்கலாம். அப்போது செரிமானம் நன்கு நடக்கும். செரிமானம் ஆன பின்பு, போஷாக்கை உடல் முறையாக, கிரகித்துக்கொண்டால்தான் உடல் இயக்கமும், வளர்ச்சியும் சரியான பாதையில் நடக்க முடியும். சக்தியை கிரகிப்பதில் தடை ஏற்பட்டால் உடல் எடை குறையும். ஆகவே, சக்தியை கிரகிக்க என்ன தடை என்று அறிந்து அத்தடையை நீக்க வேண்டும்.
மன அழுத்தம், உணர்ச்சிகளின் தடுமாற்றங்கள் ஆகியவற்றால் இத்தடை நேரலாம். அப்படியாயின் அவற்றை சரி செய்வது நலம்.
உடல் எடை குறைவு ஏற்படும்போது உடல் எடையை கூட்டுவதை மட்டும் கருத்தில் கொண்டு சிகிச்சை எடுக்காமல், உடல்நலம் மேம்படவும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
வாத, பித்த, கபதோஷங்களின் நிலை மாறுபாட்டால், உடல் நலம் பாதிக்கப்படுகிறதா என அறிந்து, அவற்றை சீர்படுத்தவும் முயல வேண்டும்.
உடல் எடை குறைவது வாதத்தின் அதிகமான நிலைப்பாடு. ஆகவே, உணவு, மருந்து, மற்ற பயிற்சிகள் ஆகியன வாதத்தை குறைப்பதாக இருக்க வேண்டும்.
அக்னியை சரிப்படுத்துதல், சத்துக்களை உறிஞ்சுவதில் குறைபாடு இருப்பின் அதை நீக்குதல் ஆகியவற்றுடன் உடலில் வேறு ஏதேனும் நோய் இருப்பின் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் சேர்த்து மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
வாததோஷம் வறண்ட, லேசான, சூஷ்மமான, இடம் பெயரத்தக்க, தெளிவானதுமான இயல்புகளை கொண்டது. எடை குறைவது என்பது வாததோஷத்தின் நிலை மாறுபாட்டால் நேருகிறது.
வாததோஷம், மனதையும், சக்தி உடலில் பயணிக்கும் பாதைகளையும் பாதிக்கும். தூண்டுதல்களால் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும். இக்காரணங்களால் உடல் போஷாக்கினை கிரகிப்பதில் தடை நேரிடுகிறது.
அமைதி, பாதுகாப்பு, நிலைத்த தன்மை, புதுப்பித்தல் ஆகிய உணர்வுகளை உடலும், மனமும் இயைந்த கட்டமைப்பு பெறுமானால் போஷாக்கை கிரகிப்பதிலும் முன்னேற்றம் கிட்டும்.
உணவு முறைகளால் நாம் கொணரும் மாற்றங்களை விட இப்பயிற்சிகள் அதிக அளவில் பயன் தருகின்றன.
நமது உடலியக்கம், இயற்கையாக, ஓர் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது. மற்ற உயிரினங்களும், தாவரங்களும், பகல், இரவு, பருவ கால மாற்றங்கள் ஆகியவற்றுக்கு தகுந்தபடி இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன. ஆனால் மனிதகுலமோ இயற்கையில் இருந்து வெகுதூரம் விலகி இருக்கிறது.
ஓரளவு, நமது நடைமுறைகளை ஒழுங்குபடுத்தினாலே, நமது நரம்பு மண்டலத்துக்கு உதவியாக இருக்கும். நரம்பு மண்டலம் அமைதி பெறும்போது உடல் போஷாக்கை கிரகிப்பது ஊக்குவிக்கப்படும். உடலின் எல்லா திசுக்களுக்கும், எல்லாம் சரியாக இருக்கிறது என்று தகவல் போய்ச்சேரும். உடல் உறுப்புகளில் இருந்து சக்தியை பெறுவது குறைந்து, உணவில் இருந்து சக்தியை கிரகிப்பது நடக்கும். அதனால் உறுப்புகள் வலுவிழப்பது தவிர்க்கப்படும்.
பிராணன் என்பது உயிர்மூச்சு, உயிர் சக்தி, நமக்கு வாழ்வாதாரமாக இருப்பது. அது சுவாசத்தின் மூலம் பெறப்பட்டு உடலின் ஒவ்வொரு திசுவுக்கும், செல்லுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
வாதத்தின் நிலைப்பாடுகளை குறைக்க உதவும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்கும். உயிர்ச்சக்தி காக்கப்படும். உடலின் ஆழத்திலுள்ள திசுக்களுக்கு உயிர்சக்தி போய்ச்சேரும். 15 நிமிட பிராணாயாமம் போதுமானது.
நாடி சோதனம்: நீரும், மருந்தும் கலந்து கொதிக்கும்போது ஆவியை (பாதிக்கப்பட்ட இடத்தில் பிடித்தல்) வாதத்தை குறைக்கும் பயிற்சியாகும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும்.
பொதுவாக, உடல்நலனுக்கு தூக்கம் அவசியம். அதிலும் உடல் எடையை கூட்டும் சமயத்தில் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. தூக்கத்தின் இயல்புகள், உடல் எடையை குறைக்கும் வாதத்தின் போக்கை கட்டுப்படுத்தும்.
நமது உடலுக்கு எவ்வளவு நேரத்தூக்கம் அவசியம் என்பதை புரிந்து கொண்டு அத்தனை நேரம் தூங்குவது நல்லது. குறித்த நேரத்தில் தூங்குவதும், எழுவதும் மிகவும் அவசியம்.
இன்றைய உலகில், ஒழுங்கான இடைவெளியில் உணவு உண்பதில்லை. அவசரமாக உண்கிறோம். அல்லது வேறு காரணங்களால், வேறு வேலைகளுக்காக உணவை ஒதுக்குகிறோம். இது வாதத்தை அதிகரித்து, உடல் போஷாக்கை உறிஞ்சுவதை தடுக்கும்.
ஆகவே திட்டமிட்ட நேரங்களில் உணவை எடுத்து கொண்டாலே உடலுக்கு தேவையான சக்தி, தொடர்ந்து கிடைத்து கொண்டிருக்கும். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை போலவே எப்போது சாப்பிடுகிறோம், எவ்வாறு சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது.குறிப்பிட்ட நேரத்தில் கவனம் முழுவதும் சிதறாமல், உணவின் மீது இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். உணவினால் நாம் போஷாக்கை பெறுகிறோம் என்ற எண்ணத்தோடு உண்ண வேண்டும்.
இதைத்தான் நமது கலாச்சாரமும் அன்னம் கடவுள் என்று வணங்குகிறது. அதற்குரிய மரியாதை தர வேண்டும் என்கிறது. நமது உடலில் அக்னி உணவை செரிக்கிறது. உணவை உடல் கிரகிக்கும் அளவுக்கு மாற்றி உடலின் ஒவ்வொரு திசுவுக்கும் செல்கிறது என்பதை மனக்கண்ணால் காண வேண்டும். உணவு திருப்தியாக இருந்தது என்பதைக்காட்டும் ஆழமான, நீண்ட மூச்சுக்களை எடுக்க வேண்டும். பின் அடுத்த வேலைக்கு தயாராகலாம்.
வாதத்தைக்குறைக்க எண்ணெய் நல்ல உணவு, நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், நெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியன நன்மை தரும்.
இனிப்பான புளிப்பு, உப்புச்சுவையுள்ள உணவுகள் நலம் தரும். இயற்கையிலேயே இனிப்பான பழங்கள், கொட்டைகள், தானியங்கள், பால், தயிர், முட்டை, நெய், வேர்க்காய்கறிகள் ஆகியன நலம் தரும். பேரீச்சை, பாதாம், உலர் பழங்கள் அளவோடு எடுக்கலாம்.
உணவுகளுக்கிடையே சாப்பிடும் நொறுக்குத்தீனிகள், பெறும் சர்க்கரையால் ஆன பொருட்களாகவோ, துரித உணவுகளாகவோ இல்லாமல் சத்து நிறைந்ததாக இருப்பது அவசியம்.
உடலில் போஷாக்கு குறையும் போது உடலைக் கட்டமைக்கும்படியான உணவுகளை சாப்பிட ஆவல் பிறக்கும். உடல் தன் தேவையைச் சொல்லும் சங்கேத மொழி அது.எடை குறைந்திருப்பவர்களுக்கு சாப்பிட தோன்றும் உணவுகள் இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவைகள் ஆனவை என்றால் அவை சரியானவை என்பதை புரிந்து அளவோடு உண்ணலாம்.
நீர்ச்சத்துக்குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வது.
எண்ணெய்க்குறைபாடு போலவே தண்ணீர் குறைவதும் உடலின் அடிப்போஸ் திசுக்களை (கொழுப்பு) இழக்கச் செய்யும்.
அதிக அளவில் வெதுவெதுப்பான நீரை அருந்துவது, காபின் தவிர்த்து, பிற திரவ நிலை உணவை எடுப்பது ஆகிய போதுமான நீர்ச்சத்து உடலில் இருக்க உதவும். அப்போது தான் சக்தியை கிரகிப்பது சரியாக நடக்கும். வளர்ச்சிதை மாற்றங்கள் நடைபெறும் பாதைகள் நன்கு செயல்பட முடியும். செரிமான மண்டலம் மட்டுமல்லாமல் உடல் முழுவதும் உள்ள ஒவ்வொரு திசுவின் செயல் மேம்பாட்டுக்கும் உதவும்.
தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் 1-4 கப் வரை வெதுவெதுப்பாக்கி குடிப்பது நல்லது.
இது இரவில் வளர்ச்சிதை மாற்றம் நடந்து வெளியேற்ற தயாராகும். கழிவை நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும். நாள் முழுவதும் வெது வெதுப்பான நீர், மூலிகை தேநீர், மற்ற திரவநிலை உணவுகளை 3 வேளை உணவுக்கிடையே எடுப்பது நல்லது. உடல் தகுந்த எடையை அடைந்த பின்பும் இதைப்பின்பற்றுவது நல்லது.
இயற்கையாக உடற்பயிற்சி, வாதத்தினை அதிகரிக்கும். கவனமாகத் தேர்ந்தெடுத்து செய்யாவிட்டால் கொழுப்புச்சத்தை கரைத்து உடல் எடையை குறைத்து விடும்.
சரியாகத் தேர்வு செய்து உடற்பயிற்சியை முறையாக செய்தால் மன அழுத்தம் குறையும். அக்னி தூண்டப்பெறும், ரத்த ஓட்டம் சீராகும். செரிமானம் சரியாக நடக்கும். கழிவு முறையாக வெளியேற்றப்படும், தூக்கம் நன்கு வரும். உடல் இறுக்கம் குறையும். இதன் காரணமாக உடல் போஷாக்கு பெறும்.
ஆகவே நமது உடலுக்குப் பொருத்தமான பயிற்சி செய்யும் நேரம் ஆகியவற்றை தெரிந்து செய்வது நல்லது. பொதுவாக 20 நிமிட பயிற்சி, ஆன்மா ஆகிய அனைத்துக்குமான பயிற்சி ஆகும்.
வாதத்தைக்குறைக்கும் யோகாவை மேற்கொள்ளலாம். சில முறை சூரியநமஸ்காரம் செய்வதும் பயன்தரும்.
ஆயுர்வேதத்தில் செரிமானம், சத்து உறிஞ்சப்படல் ஆகியவற்றுக்கான மூலிகைகள் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மூலிகையும் குறிப்பிட்ட திசுக்கள் மற்றம் உறுப்புக்கள் கட்டமைப்புக்கும், போஷாக்குக்கும் உதவும் தனித் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
திசுக்களுக்கு போஷாக்கு தரும்.
அட்ரினல் சுரப்பி நன்கு வேலை செய்ய உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.
ஒஸஜ் எனப்படும் உயிர் சக்தியை வளர்க்கும்.
மன அழுத்தத்தை சம நிலைப்படுத்தும்.
இரவில் நன்கு தூங்க உதவும். பகலில் உயிர் சக்தியை தக்க வைத்து பாதுகாக்கும்.
நெல்லிக்காயை அடிப்படையாக கொண்டது.
அக்னியை தூண்டும்.
மன அழுத்தத்தால் உடல் பாதிக்கப்படாமல் காக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பலத்தையும், உயிர் சக்தியையும் ஊக்குவிக்கும்.
பொதுவான உடல் நலனைக் காக்கும்.
திசுக்களுக்கு போஷாக்கு தரும்.
உடல் நலன், மன நலன் காக்கும்,
இது சாத்விகமானது. மனதை அமைதிப்படுத்தும். அன்பு, பக்தி ஆகியன உயர உதவும்.
செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும்.
திசுக்களுக்கு போஷாக்கு தரும்.
அக்னியை சம நிலையில் வைக்க உதவும்.
ஆமத்தை வெளியேற்றும்.
ஓஜஸ் மேம்பட வழி வகுக்கும்.
மருத்துவ ஆலோசனையுடன் இம் மருந்துகளை எடுப்பது நல்லது. மேலும் சில முயற்சிகள், பயிற்சிகளையும் சேர்த்து கொள்ளலாம்.
எண்ணெய் தேய்த்துக் கொள்வது உடலுக்கு மட்டுமின்றி, சூஷ்மமான விழிப்புணர்வுக்கும் நன்மை பயக்கும்.
மன அழுத்தத்துடன் இருக்கும் போதும், மிகவும் அதிக வேலைப்பளுவுடன் இருக்கும் போதும், போஷாக்கு குறைவாக இருக்கும் போதும் மாற்றங்களை தரக்கூடியது.
காலையில் குளிக்கும் முன் ஒன்றரை கப் வெதுவெதுப்பான எண்ணெயை உடலில் தேய்து குளிக்கலாம். எண்ணெய் நமது உடலுக்கு பொருத்தமானதா என்று மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
இரவு தூங்கும் முன் பாதங்களிலும், தலையிலும் எண்ணெய் தேய்த்துக் கொள்வது நல்ல மாற்றமாக இருக்கும். நல்ல தூக்கத்தை தரும். நல்ல சக்தியை தரும், நரம்பு மணடலத்தை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும்.
உடல் எடையை பேணும் முயற்சியில் மன அழுத்தம், படபடப்பு மற்றும் பிற உளவியல் பிரச்சினைகள், உணர்ச்சிகளின் தலையீடு ஆகியன இருப்பின் அவற்றை தீர்த்து, உடலை கட்டமைக்க, தியானம் உதவும்.
எடை கூட்டும் முயற்சியில் இருப்பவர்களுக்கு செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்துவது அவசியமான செயல் ஆகும். உள்ளே உணவு வராத போது உணவை செரிக்க தேவையான சக்தி உபரியாக இருக்கிறது. அந்த சக்தியை உபயோகப்படுத்தி, உடல் தன்னை தானே சுத்தப்படுத்தி கொள்ளவும், கட்டமைப்பை சீர்படுத்தி கொள்ளவும் பயன்படுத்தி கொள்கிறது.
ஆயுர் வேதத்தில் பொக்கிஷமாக கருதக் கூடியது ரசாயனா, புனரமைத்தல். இதன் நோக்கம் உடலின் அடிப்படை கட்டமைப்பான செல்களிலிருந்து எல்லா மட்டத்திலும் போஷாக்கை பெற வைக்க வேண்டும் என்பதே.இதனால் உடலில் பழுது ஏதேனும் இருந்தால் நீக்கப்படும், புதுப்பிக்கப்படும். உடலுறுப்புகள், திசுக்கள் மற்ற படி உடல், மனம், ஆன்மா என எல்லாவற்றுக்கும்உதவும்.
இந்த முறையில் உணவு முறை மாற்றம், நடைமுறை மாற்றம், மூலிகைகள் உபயோகம் என்பன பின்பற்றப்படுகின்றன. பொதுவாக மக்களும் இந்த சிகிச்சையால் நலம் பெறுகின்றனர். இதனை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் மேற் கொள்வது நல்லது.
பித்தத்தின் காரணமாக வரும் உடல் எடை குறைவு-
பித்த தோஷம் அதிகமாவதன் காரணமாக உடல் எடை குறையலாம். பித்த தோஷம் அதகமாகும் போதுஅவை தம்மைத் தாமே எரித்து கொள்ளும், மன அளவில் அதிக எழுச்சியும், அதிகப்படியான சிந்தனையும் அச் சமயத்தில் இருக்கும்.
இதனால் ரத்த இழப்பு,ஹெப்படைடிஸ் ரத்த சோகை, கல்லீரல் செயல் குறை பாடு ஆகியனவும் நேரும். பித்த தோஷத்தை குறைக்கும். உடல் கட்டமைப்பை காக்கும் உணவுகளை எடுக்க வேண்டும்.
மசாலாப் பொருட்களை முழுதும் தவிர்க்க வேண்டும். கோதுமை, அரிசி, பச்சைப் பயிறு ஆகியவை சிறந்த உணவுகளாகும். நெய் மிக சிறந்த உணவு. சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை அளவோடு எடுக்கலாம்.
சோற்றுக் கற்றாழை, சதாவரி, சீந்தில் கொடி ஆகிய மூலிகைகள் நல்ல பலன் தரும். ச்யவனப்ராஷ், பிரம்ம ரசாயனம், சதாவரி ஆகியன மிகுந்த நன்மை தரும்.
ஆயுர் வேதம் முழுமையான உடல் நலத்தை பேணுவதற்காக வாழ்வின் பல்வேறு நடைமுறைகளிலும் மாற்றங்களை கொணருகிறது. ஆகவே ஒவ்வோர் அடியும் முன்னேற்றத்திற்கான படியே.
அவசர கதியில் இல்லாமல், மெதுவாக நம்மால் மேற் கொள்ள முடியும் வகையில் முயற்சிகள் இருக்கலாம். நமக்கு உதவி தேவைப்படும் இடங்களில் ஆலோசனை பெறுவது நல்லது.இடையிடையே எவ்வளவு தூரம் முன்னேற்றப் பாதையில் கடந்திருக்கிறோம் என்று நின்று நிதானித்து பார்த்து அதற்கேற்றாற் போல் தொடர்வது சிறந்தது.
Average Rating