தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவத்தை படமாக்கிய எம்.ஜி.ஆர். படக்குழு..!!

Read Time:2 Minute, 3 Second

காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது.

1967 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்தியது. இந்த நிகழ்வு எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக அந்த சம்பவம் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டது.

மேலும் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி, அன்றைய திரைப்பட இயக்குனர்கள் பி.ஆர்.பந்துலு, கே.சங்கர் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன.

இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், பி.ஆர்.பந்துளுவாக ஒய்.ஜி.மகேந்திரன், ஜானகி அம்மாவாக ரித்விகா, எம்.ஜி.சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, மற்றும் வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தின் டீஸர் வரும் ஜனவரியில் பிரதமர் மோடியால் வெளியிடப் படவேண்டுமென்று, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக திரைப்படக் குழுவினர் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் எனக்கூறி 3 பெண்களை திருமணம் செய்த இளம்பெண் கைது..!! (வீடியோ)
Next post வழியால் சென்ற அக்காவை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்த வாலிபர்!: அக்கா கொடுத்த தண்டனை..!! (வீடியோ)