சரும சுருக்கத்தை நீக்கும் ஸ்பூன் மசாஜ்..!!
முகம் மிருதுவாகவும், பொலிவுடனும் காட்சியளிக்க ஸ்பூன்களை கொண்டும் மசாஜ் செய்யலாம். அவை சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து சரும சுருக்கத்தை நீக்கும்.
இரண்டு ஸ்பூன்கள், ஒரு கப் ஆலிவ் ஆயில் அல்லது சூரிய காந்தி எண்ணெய், ஒரு கப் குளிர்ந்த நீர், சிறிது பனிக்கட்டி ஆகியவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் முகத்தை நன்றாக கழுவி பருத்தி துணியால் துடைத்து கொள்ள வேண்டும். எண்ணெய்யில் ஸ்பூனை ஒரு நிமிடம் வைத்துவிட்டு, அதன் பின்பகுதியை முகத்தில் மென்மையாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். நாடி, கன்னம், நெற்றி, மூக்கு கண் இமை என முகத்தின் அனைத்து பகுதியிலும் தேய்த்து மென்மையாக வருட வேண்டும்.
ஸ்பூனில் வெதுவெதுப்பு தன்மை குறைந்து போனால் மீண்டும் எண்ணெயில் சிறிது நேரம் மூழ்க வைத்துவிட்டு மசாஜை தொடர வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடமாவது மசாஜ் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மசாஜ் செய்து முடித்தவுடன் சுத்தமான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இந்த மசாஜ் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.
கண்களுக்கு அடியில் தொங்கும் தசையை நீக்கவும் ஸ்பூனை கொண்டு மசாஜ் செய்யலாம். குளிர்ந்த நீரில் ஐஸ்கட்டி சேர்த்து அதில் ஸ்பூனை போட வேண்டும். ஸ்பூன் நன்கு குளிர்ந்த நிலையை அடைந்ததும் அதன் பின்பகுதியை கண் இமைகளின் மேல் வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். ஸ்பூன் சூடான நிலையை அடைந்தால் மீண்டும் குளிர்ந்த நீரில் நனைத்து பயிற்சியை தொடர வேண்டும். பின்னர் கண்களுக்கு அடியில் ஸ்பூனை சில நிமிடங்கள் வைக்க வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் கண்களின் அடியில் இருக்கும் தசைப்பை நீங்கும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating