“த லவ் குரு” ஹொலிவுட் திரைப்படத்திற்கு அமெரிக்கா வாழ் இந்துக்கள் எதிர்ப்பு

Read Time:2 Minute, 6 Second

ஹொலிவுட் நகைச்சுவைத் திரைப்படமான “த லவ் குரு’ ஆனது உலகளாவிய ரீதியிலுள்ள மில்லியன் கணக்கான இந்துக்களின் மத நம்பிக்கையைக் காயப்படுத்துவதாக உள்ளதென கண்டனம் தெரிவித்து, அமெரிக்கா வாழ் இந்துக்கள் எதிர்ப்பு நடவடிக்கை யொன்றை ஆரம்பித்துள்ளனர். நடிகர் மைக் மையர்ஸ் நடிப்பில் உருவான “த லவ் குரு’ திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை திரையிடப்படவுள்ளது. இந்திய ஆசிரமமொன்றிலுள்ள ஆசான்களிடம் தந்திர வித்தைகளைக் கற்று அமெரிக்காவுக்கு வரும் குரு பித்கா என்பவர், சுயமாக பிரபல்யம் அடைவதற்காக கனடிய ஹொக்கி விளையாட்டுவீரர் ஒருவர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவ முயற்சிப்பதே இந்த நகைச்சுவைத் திரைப்படத்தின் மையக் கதையாகும். இந்நிலையில் மேற்படி திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இணையத்தளம் மூலமாக வெளியிடப்பட்ட முறைப்பாடொன்றில் 5,000 பேருக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவிலுள்ள இந்துக்கள் இந்திய தணிக்கை சபைக்கும் இத்திரைப்படம் தொடர்பான எதிர்ப்பு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மேற்படி திரைப்படத்தை தயாரித்த “பராமொன்ட் பிக்ஷர்ஸ்’ ஆனது, எவருடைய மத நம்பிக்கையையும் புண்படுத்தும் விதத்தில் இந்த திரைப்படம் தயாரிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கருத்துக் கணிப்பில் பாரக் ஒபாமா முன்னிலை
Next post கொழும்பில் கைது செய்யப்பட்ட குண்டு வெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரி புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் தேவதாசன்