லண்டனில் இந்தியர் ஒருவர் நடத்தி வரும் தாமரை விடுதிக்கு விருது

Read Time:1 Minute, 45 Second

லண்டனில் இந்தியர் ஒருவர் நடத்தி வரும் தாமரை விடுதிக்கு சிறந்த இரவு நேர விடுதிக்கான விருது கிடைத்துள்ளது. டெல்லியை சேர்ந்த ரோஹித் கட்டார் என்பவருக்கு சொந்தமான ஓல்ட் வேர்ல்ட் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனம் லண்டனில் தாமரை என்ற பெயரில் விடுதி உணவு மற்றும் மதுபான விடுதி ஒன்றை நடத்தி வருகிறது. இந்த விடுதிக்கு சிறந்த இரவு நேர மதுபான விடுதிக்கான விருது கிடைத்துள்ளது. லண்டனில் நேற்று நடைபெற்ற கோலாகல விழாவில் விருந்தோம்பல் துறையில் ஈடுபட்டுள்ள 600க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்ட விழாவில் விருது அளிக்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் தாமரை விடுதிக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. லண்டனில் விருந்தோம்பல் துறையின் உயரிய விருதினைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தாமரையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து வரும் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மறக்க இயலாத அளவுக்கு சேவையாற்றியதன் விளைவாக இந்த விருது கிடைத்திருப்பதாக தாமரை விடுதியின் பொது மேலாளர் அன்ஷûமன் சக்சேனா தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக புகார்: கணவரை ஜெயிலில் தள்ள துடிக்கும் பெண் வக்கீல்; சென்னையில் ருசிகர வழக்கு
Next post இஸ்லாமிய பெண்கள் இருவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினார் ஒபாமா