வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்..!!

Read Time:3 Minute, 14 Second

வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் அந்த வியர்வையானது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதனாலோ அல்லது வெயிலில் நடந்து செல்வதாக இருந்தாலோ, எந்த வழியில் வியர்வை வெளியேறினாலும் அது நல்லது தான்.

வியர்வை வெளியேறுவது என்பது உடலின் தீவிர செயல்பாட்டின் ஓர் அறிகுறி. இந்த வியர்வையின் மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதுமட்டுமின்றி வேறு சில நன்மைகளும் வியர்வை வெளியேறுவதன் மூலம் கிடைக்கிறது.

இப்போது வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

வியர்வை வெளியேற்றத்தின் போது, உடலில் மற்றும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.

உடற்பயிற்சி செய்து வியர்வை வெளியேறும் போது மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது.

வியர்வை மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதால், உடல் சுத்தமாவதோடு, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளும் வெளியேறி சருமமும் பொலிவோடு இருக்கும்.

வியர்வை அதிகம் வெளியேறினால் சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கலாம். எப்படியெனில் வியர்வையின் மூலம் உடலில் உள்ள உப்புக்கள் வெளியேறி, எலும்புகளில் கால்சியம் தக்க வைக்கப்படும். இதன் மூலம் சிறுநீரகங்களில் உப்பு மற்றும் கால்சியம் படிந்து கற்களாக உருவாவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி வியர்வை அதிகம் வெளியேறினால், தண்ணீர் அதிகம் குடிக்க தோன்றும். இப்படி தண்ணீர் அதிகம் குடிப்பதால், சிறுநீரகங்களின் செயல்பாடும் மேம்படும்.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், வியர்வைக்கும், காயங்கள் குணமாவதற்கும் சம்பந்தம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு வியர்வையானது ஆன்டி-பயாடிக்ஸை உடல் முழுவதும் பரப்பி, நுண் கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு அளிப்பதே காரணம்.

வியர்வைக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் சம்பந்தம் உள்ளது. அதனால் தான் காய்ச்சல் இருக்கும் போது வியர்வை வெளியேறினால், உடனே காய்ச்சல் குணமாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூப்பர்சிங்கர் ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு திருமணம்..!! (வீடியோ)
Next post ஹாலிவுட்டுக்கே சவால் விடும் மெர்சலின் VFX மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள்: வீடியோ..!!