மார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்துகொள்வது எப்படி?..!!

Read Time:2 Minute, 8 Second

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பக புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை.

இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. பெரும்பாலும் வலியில்லாமல் காணப்படும் கட்டிகள் தான் இதன் அறிகுறியாக உள்ளது.

கண்ணாடி முன் நின்று மார்பகங்களின் அளவு, நிறம், வடிவத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று கவனிக்கவும்.

மார்பகங்களை வலது மற்றும் இடது என இரு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, மார்பகத்தை தடவிப் பார்த்து ஏதேனும் கட்டி, வலி தெரிகிறதா என பரிசோதிக்க வேண்டும். இதனுடன் அக்குள் பகுதியையும் சேர்த்து பரிசோதிக்கலாம்.

உட்கார்ந்த நிலையிலும் மல்லாந்து படுத்த நிலையிலும் ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல்களால் மார்பகங்களை அழுத்தி கட்டிகள் இருக்கிறதா என பார்க்கலாம்.

மார்பக காம்பை அழுத்தி பார்க்கும்போது, ஏதாவது திரவம் அல்லது ரத்தம் வருகிறதா என கவனிக்க வேண்டும்.

குறிப்பு: மார்பகப்புற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், ‘நான் சுயபரிசோதனை செய்தேன், ஆனாலும் எனக்கு எதுவும் தெரியாமல் போய்விட்டதே’ என்று வருந்துவார்கள். எனவே, 30 வயதைக் கடந்த பெண்கள், வருடத்துக்கு ஒருமுறை கட்டாயமாக மேமோகிராம் செய்து கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜித்தை ஃபாலோவ் பண்ணும் பிரபல சீரியல் நடிகை! என்ன செய்தார் தெரியுமா..!!
Next post கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்பு: வயல்வெளியில் குழந்தை பெற்ற பரிதாபம்..!!