உடல் எடையை குறைக்கும் அதிசய உடை

Read Time:1 Minute, 58 Second

அதிசயம் ஆனால் உண்மை என்று சொல்வார்களே அந்த ரகத்தை சேர்ந்தது தான் இந்த ஹால்ப் பேண்ட். (அரைக்கால் சட்டை) இந்த கால்சட்டையை அணிந்து கொண்டால், 12 வாரங்களில் உடல் எடை குறைந்து விடுமாம். இதற்காக வாக்கிங், ஜாக்கிங் எதுவும் செய்யவேண்டாம் என்று சொல்கிறார். இந்த பேண்டை வடிவமைத்த இத்தாலிய காஸ்மெடிக் சர்ஜன் பேராசிரியர் மார்கோ காஸ்பரோட்டி. “இந்த இலாஸ்டிக் கால்சட்டையில் 2 மெல்லிய இறுக்கமான பட்டைகள் உள்ளன. கால்களை கவ்வி பிடிக்கும் இந்த உடையை அணிந்து கொண்டு நடக்கும்போது இந்த பட்டைகள் மென்மையாக மசாஜ் செய்கின்றன. இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது உடலில் சேர்ந்து உள்ள கொழுப்பு கட்டிகளை கரைக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. இந்த உடையை பெண்களும் அணியலாம். இதை அணிபவர்கள் உடற்பயிற்சி செய்யவேண்டிய அவசியம் இல்லை என்ற போதிலும், சிறிதுநேரம் உடற்பயிற்சி செய்தால் அது நல்ல பலனை கொடுக்கும்” என்று பேராசிரியர் மார்கோ கூறுகிறார். இந்த உடையை அணிந்து கொண்டு அதிகமான நடமாட்டத்துடன் இருந்தால் அது சிறப்பாக செயல்படும். அதிகமாக உழைப்பவர்கள் 4 வாரங்களில் நல்ல பலனை காணமுடியும் என்றும் அவர் தெரிவிக்கிறார். இந்த உடையை லிபோ காண்டோர் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாக். மீது நடவடிக்கை: ஒபாமா
Next post கத்தார் நாட்டு தீ விபத்தில் ஐந்து இலங்கையர்கள் பலி