கடல் வழியாக 45 நாட்களில் உலகை சுற்றிவந்து பிரான்ஸ் வாலிபர் புதிய சாதனை..!!

Read Time:2 Minute, 9 Second

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பிரான்காயிஸ் கபார்ட்(34). கடல் வழி பயணங்களில் அதிக ஆர்வம் உடைய இவர் உலகை கடல் வழியாக சுற்றி வர திட்டமிட்டார். அதற்காக 30 மிட்டர் நீளமுள்ள பாய்மரப்படகில் தனி ஆளாக பயணம் மெற்கொண்டுள்ளார்.

கடந்த மாதம், பிரான்சில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர், இன்று (ஞாயிறு) பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பினார். அவர் 42 நாட்கள், 16 மணி நேரம், 40 நிமிடம், 35 விநாடிகளில் உலைகை சுற்றி முடித்தார். கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாமஸ் கோவிலே என்பவர் 49 நாட்களில் படகு மூலம் உலகை சுற்றி வந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை தற்போது பிராகாயிஸ் கபார்ட் முறியடித்துள்ளார். அவர் முந்தைய சாதனையை விட 6 நாட்கள், 10 மணி நேரத்திற்கு முன்னதாக உலகை சுற்றிவந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அவரது சாதனை அவரது படகில் உள்ள கருப்புப்பெட்டி மற்றும் ஜி.பி.எஸ். ஆகிவற்றை சரிபார்த்தபின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என உலக படகு வேக கவுன்சிலை சேர்ந்த பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

இவருடன் சேர்த்து இதுவரை நான்கு பேர் கடல் வழியாக உலகை சுற்றிவந்து சாதனை படைத்துள்ளனர். 2004-ம் ஆண்டு, பிரான்சின் பிரான்சிஸ் ஜோயான்(72 நாட்கள் 22 மணிநேரம்), 2005-ம் ஆண்டு, பிரிட்டன் பெண்ணான எல்லென் மெக்ஆர்தர்(71 நாட்கள் 14 மணிநேரம்) ஆகியோரும் படகு மூலம் உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “காதலனுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த ஆறு வயதுச் சிறுமியை கழுத்தறுத்துக் கொலை செய்த தாய்..!!
Next post இயக்குனராக அவதாரம் எடுக்கும் அரவிந்த் சாமி..!!