பின்லேடன் உயிருடன் உள்ளார் -அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

Read Time:2 Minute, 6 Second

சர்வதேச ஒசாமா பின்லேடன் சாகவில்லை; இன்னும் உயிருடன்தான் வாழ்கிறார் என, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் திங்கள்கிழமை தெரிவித்தார். பிரிட்டனில் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டுள்ள ஜார்ஜ் புஷ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இதைத் தெரிவித்தார். உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதும், ஒசாமா பின்லேடனை உயிருடனோ, சாகடித்தோ ஒப்படையுங்கள் என ராணுவத்துக்கு ஆணை பிறப்பித்திருந்தேன். ஆனால் அது தவறான வார்த்தை என்பதை தற்போதுதான் உணர்ந்து, அதற்காக வருந்துகிறேன் என்றும் ஜார்ஜ் புஷ் தெரிவித்தார். நீங்கள் அவ்வாறு கூறியதால் அமெரிக்காவுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக…: அதற்கு பதிலளித்த புஷ், ஆம்! உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அன்றைக்கு என் மனதில் என்ன தோன்றியதோ அதைத்தான் அப்படியேச் சொன்னேன். இருப்பினும் அன்று நான் கூறியதை எதிர்பாராதவிதமாக கூறியதாகவே தற்போது கருதுகிறேன் என்றார் அவர். தங்களது பதவிக்காலம் நிறைவடைவதற்குள் பின்லேடனை பிடிக்க ஏதாவது சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளீர்களா? என கேட்டதற்கு, சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளேன்; ஆனால் பின்லேடனை உயிருடன் பிடித்து நீதிகோரவே தற்போது விரும்புகிறேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் ஈழம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல -கே.வி. பாலகுமாரன்
Next post அகதிகள் போர்வையில் ஊறு விளைவித்தால்.. விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை!