அணி மாற்றம்: பாமக கடந்த வந்த பாதை

Read Time:3 Minute, 37 Second

1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக -பாஜக -மதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, பாஜக கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்தது. வாஜ்பாய் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டதால் அந்தக் கூட்டணி 13 மாதங்களில் கவிழ்ந்தது. அதன் பிறகு 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக -பாஜக -மதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. 1999-ல் அமைந்த வாஜ்பாய் அமைச்சரவையிலும் பாமக அங்கம் வகித்தது. 2001 சட்டப் பேரவைத் தேர்தல் வரை திமுக -பாஜக கூட்டணியில் இருந்த பாமக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு அதிமுக -காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது. அதைத் தொடர்ந்து வாஜ்பாய் அமைச்சரவையிலிருந்து பாமக அமைச்சர்கள் ராஜிநாமா செய்தனர். 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக -காங்கிரஸ் -பாமக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக தனித்து ஆட்சி அமைத்தது. அதிமுகவுக்கு பாமக தயவு தேவையில்லை என்ற நிலையில் தேர்தல் முடிந்த சில மாதங்களில் திமுக -பாஜக கூட்டணிக்கு பாமக தாவியது. வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றது. 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு திமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. பாமகவும் திமுக -காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது.

மீண்டும் அணி மாற்றம்:

வரும் நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் என்கிற சூழ்நிலையில் பாமக மீண்டும் அணி மாற தன்னை தயார்படுத்தி வந்தது. திமுகவின் முக்கியக் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினர், திமுக ஆட்சியை புகழ்ந்து வரும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தது பாமக.

திமுக அரசு இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்த நாளில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக அரசுக்கு பெயில் மார்க் கொடுப்பதாக தெரிவித்தார். அதன் பிறகும் தொடர்ந்து திமுக அரசை ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் பாமகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் பேச்சைக் காரணம் காட்டி கூட்டணியில் இருந்து பாமகவை திமுக இப்போது வெளியேற்றியுள்ளது.

மீண்டும் 1998?

திமுக கூட்டணியில் பாமக இல்லை என்ற நிலையில், 1998-ல் ஏற்பட்டதைப்போல அதிமுக -பா.ம.க. -பாஜக -மதிமுக என்று ஒரு கூட்டணி அமையும் சூழல் உருவாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக் குண்டுவெடிப்பு: 51 பேர் பலி
Next post தமிழ் ஈழம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல -கே.வி. பாலகுமாரன்