விராட் கோலியுடன் சொகுசு வீட்டில் குடியேறும் அனுஷ்கா சர்மா..!!

Read Time:2 Minute, 48 Second

இத்தாலியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மொத்தம் ரூ.220 கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக ரூ.10 கோடி வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க ரூ.4 கோடி கேட்கிறார்.

சேமிப்பில் ரூ.36 கோடி வைத்து இருக்கிறார். ரூ.5 கோடியில் பி.எம்.டபுள்யு, ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் ரகங்களில் 4 வெளிநாட்டு சொகுசு கார்கள் உள்ளன. கடைசி 3 வருடத்தில் இவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. அடுத்த 3 வருடங்களில் மேலும் 30 சதவீதம் உயரும் என்று கணக்கிட்டு உள்ளனர்.

படத்தில் சம்பாதிக்கும் பணத்தை அவர், புதிய வீடுகளில் முதலீடு செய்கிறார். 2012-ல் ரூ.10 கோடிக்கு மும்பையில் 3 வீடுகள் வாங்கி விலை ஏறியதும் அவற்றை விற்று லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது. வீடுகள் வாங்குவது பாதுகாப்பான முதலீடு என்கிறார். நவநாகரீக உடைகள் தயாரிப்பு நிறுனத்தில் பங்குதாரராகவும் இருக்கிறார்.

அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் ஆடம்பர சொகுசு வீட்டில் குடியேற உள்ளனர். இந்த வீடு மும்பை ஒர்லி பகுதியில் 70 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 7 ஆயிரத்து 171 சதுர அடி பரப்பளவில் உள்ளது. விராட் கோலி கடந்த ஆண்டு ரூ.34 கோடிக்கு இதை வாங்கினார்.

இந்த வீட்டில் இருந்தபடியே கடல் அழகை ரசிக்கலாம். இதே அடுக்கு மாடி குடியிருப்பில்தான் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் மனைவி ஹேசல் கீச்சுடன் வசிக்கிறார். இந்த குடியிருப்பு வளாகத்தில் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் மைதானம், குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

அனுஷ்கா சர்மா-விராட்கோலி குடியேற உள்ள வீட்டின் சொகுசு அறை ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு வேளை ஒரு தலைக்காதலா இருக்குமோ?? முழிக்குற முழியே சரி இல்லையே..!! (வீடியோ)
Next post தாயின் கண்முன்னே குழந்தைக்கு நடந்த கொடுமை…. பெற்றோர்களே உஷார்..!! (வீடியோ)