கனடாவில் புலிகளின் வங்கிக்கணக்கில் 120 கோடி டொலர்கள்

Read Time:5 Minute, 9 Second

பிரபாகரனின் புலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டு ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, இந்தியா உட்பட முன்னணி நாடுகளில் புலிகள் இயக்கமும், அதன் செயற்பாடுகளும், மற்றும் அதற்கு ஆதரவான செயற்பாடுகளும் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அங்கு செயற்படும் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் முக்கிய ஆதரவாளர்களையும் தேடி மேற்படி நாடுகளில் புலனாய்வுப் பொலிஸ் பிரிவினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியதுடன், இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத ஆதரவுச்செயற்பாடுகளுடனுள்ள தொடர்புகள் சம்பந்தமாகக் குற்றம்சாட்டி வழக்குகளையும் தொடுத்தனர். முக்கியமாக புலிகள் இயக்கத்துக்காக நிதிசேகரிக்கும் இயக்க உறுப்பினர்களும், ஆதரவான பிரமுகர்களும் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் நடத்திவந்த அமைப்புக்களும் நிதிநிறுவனங்களும் புலனாய்வுப் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுச் “சீல்” வைக்கப்பட்டன. இதன் பின்னர் மேற்படி நாடுகளில் செயற்படும் புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் புலிகளுக்காக நிதிசேகரிக்கும் செயற்பாடுகளை கைவிட்டுவிடவில்லை. புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்படாத வேறு பெயர்களில் சமூக அமைப்புக்களையும் பொது அமைப்புக்களையும் உருவாக்கி அந்த அமைப்புக்கள் மூலம் நிதிசேகரிப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் புலிகளுக்காக நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அமைப்புக்களில் முக்கியமானது உலகத் தமிழர் அமைப்பு எனப்படும் அமைப்பாகும்.

இந்த உலகத் தமிழர் அமைப்பு ஏனைய நாடுகளைக்காட்டிலும் கனடாவிலேயே தீவிரமாகச் செயற்பட்டு புலிகள் இயக்கத்துக்காகப் பெருந்தொகையில் அங்கு வாழும் தமிழர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து நிதி உதவிகளைச் சேகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கனடாவில் 120 கோடி டொலர்களுக்கும் மேற்பட்ட தொகையைச் சேர்த்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பெரும் பணத் தொகைகளும் உலகத் தமிழர் அமைப்பின் பெயரில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 120 கோடி டொலர்கள் நிதியும் கனடாவிலுள்ள முக்கியமான ஆறு நகரங்களில் மட்டும் உலகத் தமிழர் அமைப்பினால் சேகரிக்கப்பட்ட பணத் தொகை எனவும் தெரியவந்துள்ளது.

மேற்படி தகவல்களை அண்மையில் கனடா சமஷ்டிப் பொலிஸ் பிரிவினர் குறித்த உலகத் தமிழர் அமைப்புப் பற்றி மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் இதைத் தொடர்ந்து கனடிய பொலிஸ் அதிகாரிகள் உலகத் தமிழர் அமைப்பு என்ற பெயரில் புலிகள் இயக்கத்திற்காக இதுவரைகாலமும் நிதிசேகரித்து வந்தது என்ற உண்மையைக் கண்டு பிடித்துள்ளனர்.

இதுபற்றி கனடிய பாதுகாப்புத்துறைக்கு கனடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து கனடா அரசாங்கம் மேற்படி உலகத் தமிழர் அமைப்பின் பெயரில் கனடிய வங்கிகளில் பல்வேறு கணக்குகளிலும் வைப்பிலிடப்பட்டிருக்கும் பெருந்தொகை நிதிகளையும் கொடுப்பனவு செய்யப்படாமல் நிறுத்தி வைப்பதற்காக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தொடர்ந்து குறித்த வங்கிக் கணக்குகள் விரைவில் நிறுத்திவைக்கப்படவுள்ளதாகவும் கனடாவிலிருந்து வெளியாகும் முக்கிய பத்திரிகைகளும் மற்றும் பிரதான சர்வதேச ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐரோப்பா மற்றும் சர்வதேச நாடுகளில் “புலிகளின் குரல்” வானொலி ஒலிபரப்ப தடை!
Next post சீனாவில் பூகம்பம் தாக்கிய போது பள்ளி குழந்தைகளை காப்பாற்றாமல் ஓடிய ஆசிரியர் டிஸ்மிஸ்