ஜெயஸ்ரீ தம்பியை மணந்தார் கனிகா

Read Time:2 Minute, 5 Second

நடிகை கனிகாவுக்கும், நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி ஷ்யாம் ராதாகிருஷ்ணனுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. மணமக்களை நடிகர்-நடிகைகள் திரண்டு வந்து வாழ்த்தினார்கள். பைவ்ஸ்டார் படத்தில் அறிமுகமாகி, `வரலாறு’ படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்தவர், கனிகா. இவருக்கும், நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி ஷாம் ராதாகிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஷாம் ராதாகிருஷ்ணன், `பி.இ.’ படித்தவர். அமெரிக்காவில், `சாப்ட்வேர் கன்சல்டிங் கம்பெனி’ நடத்தி வருகிறார். கனிகா-ஷாம் ராதாகிருஷ்ணன் திருமணம் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள எம்.எல்.எம். திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. வைதீக முறைப்படி நடைபெற்ற இத்திருமணத்தில், புரோகிதர்கள் மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, மணமகள் கனிகா கழுத்தில், மணமகன் ஷாம் ராதாகிருஷ்ணன் தாலி கட்டினார். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். முன்னதாக, மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. நடிகர்கள் பிரபு, பிரசாந்த், சேரன், ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, நடிகைகள் சுஹாசினி, அபர்ணா, டைரக்டர்கள் கே.பாலசந்தர், கே.எஸ்.ரவிகுமார், கவுதம் மேனன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளம்
Next post ஒபாமாவுக்கு அல்கோர் ஆதரவு