உலகத் தமிழர் இயக்கம் கனடாவில் தடை!

Read Time:1 Minute, 37 Second

கனடா டொரன்டோவில் இயங்கிவரும் உலக தமிழர் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் நேற்றுப் பிரகரடனப்படுத்தியது. புலிகளுக்குப் பல்வேறு வகையிலும் ஆதரவு வழங்கி வந்த இந்த நிறுவனம் அந்நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. கனடாவின் புலனாய்வுத் துறையான ஆர்.சி.எம்.பி. யின் நீண்டகால அவதானிப்பைத் தொடர்ந்தே இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக தமிழர் இயக்கம் தொடர்பாக 2003 இல் இருந்து குற்றவியல் விசாரணைகளை கனடா புலனாய்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. 2006 ஏப்ரலில் இவ்வியக்கத்தின் டொரன்டோ மற்றும் மொன்றியல் அலுவலகங்களிலிருந்து புலிகளுடைய பெருந்தொகையான ஆவணங்களை புலனாய்வுத் துறையினர் கைப்பற்றினர். உலக தமிழர் இயக்கம் புலிகளுக்காக செயற்படும் முன்னணி இயக்கங்களில் ஒன்றாக தொழிற்படுவதை சுட்டிக்காட்டும் சான்றுகளை ஆர்.சி.எம்.ப.p அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.2006 இல் கனடா அரசாங்கம் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்ததென்பது குறிப்பிடத்தக்கது எனவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையின் இரு மாகாணங்களுக்கு ஆகஸ்ட்டில் தேர்தல்!!
Next post பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளம்