பெண்களின் அழகைப் போற்றுவோம்..!!
“பெண்களின் திறமையை பாராட்டுவதுபோல் அவர்களது அழகையும் புகழவேண்டும். ‘நீங்க இன்றைக்கு பார்க்க ரொம்ப அழகாக இருக்கீங்க! இந்த உடை உங்களுக்கு சூப்பராக இருக்கிறது’ என்று குடும்பத்தினர் பெண்களிடம் சொன்னால், அவர்கள் மறுநாள் கூடுதல் கவனம் செலுத்தி அதிக அழகோடு ஜொலிப்பார்கள். அப்பாவும், கணவரும் பெண்களின் அழகை அதிகம் பாராட்டவேண்டும். ஒரு பெண்ணின் அழகை இன்னொரு பெண்ணே பாராட்டினால், அவள் அந்தரத்தில் பறக்கத் தொடங்கிவிடுவாள். அந்த நாள் முழுவதும் உற்சாகத்தில் மிதப்பாள். அழகால் பாராட்டுப் பெறும் பெண்கள் திறமையிலும் சிறந்தவர்களாக விளங்குவார்கள்.
பெண்கள் அதிக அழகுடன் ஜொலிக்க என்ன தேவை
“நம்பிக்கைதான் பெண்களுக்கு கூடுதல் அழகு தரும். விலை உயர்ந்த ஆடை அணிந்தாலும், விலை மதிப்பற்ற நகைகள் அணிந்தாலும், ‘இவை எனக்கு அதிக அழகைத் தருகிறது. நான் மிக அழகாக இருக்கிறேன்’ என்ற நம்பிக்கை உருவாகவேண்டும். எளிமையான, நேர்த்தியான உடையோடு நம்பிக்கையும் கலந்தால் அந்த பெண் அழகாக ஜொலிப்பாள். அதனால்தான் சில பெண்கள் நைட்டியில்கூட சூப்பராக தோன்றுகிறார்கள்”
கல்யாணத்துக்கு முன்பு பெண்கள் ஆடை, அணிகலன்களில் அதிக முனைப்புக் காட்டி மிக அழகாக தோன்ற ஆசைப்படுகிறார்களே, அதற்கு என்ன காரணம்?
“அப்போது இளமை பெண்களிடம் ஊஞ்சலாடும். பொறுப்புகள் அதிகம் இருக்காது. தன்னை அழகுபடுத்த அதிக நேரம் கிடைக்கும். மற்றவர்களை கவரும் விதத்தில் தன் அழகு இருக்கவேண்டும் என்று நினைத்து அதற்காக ரொம்ப மெனக்கெடுவார்கள். ஒவ்வொரு இளைஞர்களுக்கும் தனது வருங்கால மனைவி பற்றி ஒரு கனவு இருக்கும். அந்த கனவுகளுக்கு ஏற்ற கதாநாயகிகளாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லவா..!”
கல்யாணமான தொடக்க காலத்திலும் பெண்கள் அழகில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள் அல்லவா..?
“ஆமாம்! அப்போது ஒரு பெண்ணுக்கு தான் முழுமையடைந்த மகிழ்ச்சியிருக்கும். கணவரும் தன் மனைவி எப்போதும் ‘பிரஷ்’ ஆக இருக்கவேண்டும் என்று விரும்புவார். கூடவே கல்யாணமான புதிதில் கணவரிடம் இருந்து அழகுக்கு பாராட்டும் கிடைத்துக்கொண்டிருக்கும். பொருத்தமான வாழ்க்கைத்துணை அமையும்போது கணவர், மனைவியின் கண்ணாடி போன்று மாறிவிடுவார். கணவர் என்ற கண்ணாடியை பார்த்து நம்மை மேலும் அழகுப்படுத்திக்கொள்வதால், திருமணமான புதிதில் பெண்கள் அதிக அழகுடன் காட்சியளிப்பார்கள்”
திருமணத்திற்கு பிறகு பெண்கள் அழகில் அக்கறை செலுத்துவதை ஏன் குறைத்துக்கொள்கிறார்கள்?
“திருமணத்திற்குப் பிறகு கணவர், மாமனார், மாமியார், குழந்தை என்று குடும்பம் பெரிதாகிவிடுகிறது., அதனால் குடும்பத்தை கவனிக்கவே தனது 85 சதவீத நேரத்தை பெண்கள் செலவிட்டுவிடுகிறார்கள். தனக்காக 15 சதவீத நேரத்தை தான் அவர்களால் ஒதுக்க முடிகிறது. அதனால் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடுவதில்லை. உடற் பயிற்சி செய்வதில்லை. தனக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுவதில்லை.
என்னிடம் ஆடை வடிவமைக்கச் சொல்லும் பெண்களிடம் நான் அவர்களது உடல் நலம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறேன். குடும்பத்தலைவிகளின் அழகிலும், ஆரோக்கியத்திலும் அவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் அக்கறைகாட்டவேண்டும். பெண்கள் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருந்தால் அந்த குடும்பமே அழகாக இருக்கும்”
Average Rating