இலங்கையின் இரு மாகாணங்களுக்கு ஆகஸ்ட்டில் தேர்தல்!!

Read Time:3 Minute, 1 Second

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கடுமையான போர் நீடித்து வரும் நிலையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் சபரகாமுவா மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டு அதன் முதல் அமைச்சராக பிள்ளையான் பொறுப்பேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்தையும் புலிகளிடம் இருந்து மீட்பதற்காக அவர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிங்களர்கள் பெரும் பான்மையாக வாழும் சபரகாமுவா மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 27ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் 4ந் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று நேற்று முன்தினம் மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஜனதா விமுக்தி பெரமுணா தனித்து இயங்க முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த இரு மாகாண கவுன்சில்களிலும் ஆளும் கூட்டணி மெஜாரிட்டியை இழந்தது. இதனையடுத்து இவ்விரு மாகாண கவுன்சிலர்களையும் கடந்த வாரம் அதிபர் ராஜபக்சே கலைத்து உத்தரவிட்டார். எனவே தற்போது இவ்விரு மாகாண கவுன்சில்களுக்கும் தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. இதனிடையே முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இவ்விரு மாகாண கவுன்சில்கள் கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை அறிவதற்காகவே தேர்தல் நடத்த முடிவு செய்து இவ்விரு மாகாண கவுன்சில்களையும் அதிபர் ராஜபக்சே கலைத்து உத்தரவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஷாரப்பை தூக்கிலிட வேண்டும்: நவாஸ்
Next post உலகத் தமிழர் இயக்கம் கனடாவில் தடை!