அருங்காட்சியகம் ஆனது நேபாள அரண்மனை

Read Time:1 Minute, 55 Second

நேபாள மன்னர் வசித்து வந்த நாராயண்ஹிதி அரண்மனை அருங் காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. நேபாளத்தில் 240 ஆண்டுகால பழமை வாய்ந்த மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து நேபாளம் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மாவோயிஸ்ட் கட்சி அரண்மனையிலிருந்து வெளியேறுமாறு மன்னருக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து அரண்மனையிலிருந்து கடந்தசில தினங்களுக்கு முன்பு வெளியேறினார். இதையடுத்து நாராயண்ஹிதி அரண்மனை அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக நேற்று நடைபெற்ற விழாவின்போது, அரண்மனையில் நேபாள தேசியக்கொடியை அந்நாட்டு பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா ஏற்றி வைத்தார். நேற்று நடைபெற்ற விழாவின்போது, மாவோயிஸ்ட்டுகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு அரண்மனையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அரண்மனைக்கு நாராயண்ஹிதி தர்பார் அருங்காட்சியகம் என தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது. குடியரசு நாடாக வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை உணர்ந்து மன்னர் ஞானேந்திரா அரண்மனை யிலிருந்து வெளியேறியது வரவேற்கத்தக்கது என்று பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேல்மாகாண சபையை கலைக்குமாறு கோரிக்கை விடுக்க எதிர்கட்சிகள் தீர்மானம்
Next post தீவிரவாதம் தொடர்பான மேலும் சில ரகசிய ஆவணங்கள் ரெயிலில் அனாதையாக கிடந்தன: இங்கிலாந்தில் மீண்டும் அதிர்ச்சி