உடல் எடையை குறைக்கும் முட்டைக்கோஸ்..!!

Read Time:2 Minute, 51 Second

முட்டைக்கோஸ் நல்ல மருத்துவ குணங்களை கொண்டு இருக்கிறது. இதன் ஜூசை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினையை தடுத்து, கல்லீரலை சுத்தம் செய்கிறது. முட்டைக்கோசில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினந்தோறும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிக்கலாம். அதில் உள்ள குளுக்கோஸினோலேட்டுகள், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

முட்டைக்கோசில் லாக்டிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே இது குடலில் உள்ள நோய்த்தொற்றுகளை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முட்டைக்கோசை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

முட்டைக்கோஸ் ஜூஸ் சுவாசப் பாதையில் உள்ள அழற்சியை சரிசெய்து, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா பிரச்சினையில் இருந்து விடுபட உதவுகிறது. இதில் உள்ள க்ளுட்டமைன் என்னும் அமினோ அமிலம், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சினை வராமல் தடுக்கிறது. இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

முட்டைக்கோசில் உள்ள சல்போரபேன், குறிப்பிட்ட புற்றுநோய்களின் தாக்கங்களை தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. முட்டைக்கோஸ் ஜூசில் உள்ள நோய் எதிர்ப்பு அழற்சி பொருள், ஆர்த்ரிடிஸ் போன்ற உள்காயங்களை சரிசெய்து, மூட்டு அழற்சி பிரச்சினைகளை சரிசெய்ய உதவுகிறது. அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ் ஜூசை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து, அல்சர் பிரச்சினையை குணமாக்குகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டை மீறி காதலரை திருமணம் செய்த மணிமேகலை கட்டாய மதமாற்றமா? வெளியான தகவல்..!!
Next post முதலிரவில் மனைவியை தாக்கியதற்கு உண்மை காரணம் இதுதான்..!! (வீடியோ)