தகவல் தொழில் நுட்பத்திற்கான பூங்காவை இலங்கையில் அமைக்க இந்தியா திட்டம்

Read Time:1 Minute, 41 Second

தகவல் தொழில்நுட்ப பூங்காவொன்றை இலங்கையில் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பி.எஸ் குறூப் இலங்கையில் 80கோடி இலட்சம் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்கவுள்ளது. இந்நிறுவனமானது இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்பிடிபாக்ஸ் லிமிடெட் என்பவற்றுடன் இணைந்து இந்த திட்டத்தை விருத்தி செய்வதற்கு கூட்டுமுயற்சி ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. சுமார் 1கோடி 60இலட்சம் சதுரஅடிப்பரப்பில் அமைக்கப்படவுள்ள இத்தொழில் நுட்பபூங்காவிற்கு இலங்கை தகவல் தொழில் நுட்பநிலையம் 16 ஏக்கர்காணியை வழங்கியுள்ளது. இது எமது முதலாவது சர்வதேச கருத்திட்டமாகும் இத்தகைய திட்டங்கள் பலவற்றை அயல்நாடுகளில் ஸ்தாபிப்பதற்கு நாம்எண்ணியுள்ளோம் இந்த தகவல் தொழில் நுட்பபூங்கா கருத்திட்டமானது. 20.000நேரடி தொழில்வாய்ப்புகளையும் 80.000 மறைமுக தொழில் வாய்ப்புகளையும் வழங்கும் என்று பி.எஸ் குறூப் நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவ பணிப்பாளருமான பிரதீப் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புளொட் தலைவர் உமாமகேஸ்வரனின் கொலையாளிகளின் நிலையென்ன??
Next post நாய் கடித்ததால் அவதிப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டி