தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்யுமாறு கோரிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசு முன்வைப்பு

Read Time:2 Minute, 5 Second

புலிகள் இயக்கத்துக்கு நிதிசேகரிக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற அமைப்புகளை தடை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன இந்த கோரிக்கையை முன்வைத்தார். ஐரோப்பிய யூனியனின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மைக்கல் லுமெக்ஸ் இங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியவை வருமாறு இலங்கையில் தமிழ் மக்களுக்காக தனித்தாயகம் அமைப்பதற்கான கோரிக்கையை ஐரோப்பிய யூனியன் ஆட்சேபிக்கிறது தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக புலிகளை ஐரோப்பிய யூனியன் அங்கீகரிக்கவில்லை என்று கூறினார். இக்கலந்துரையாடலில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை வகித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன புலிகளின் அமைப்பு அதன் துணை அமைப்புகளும் வெளிநாடுகளில் நிதிசேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை விளக்கிக் கூறினார் அத்துடன் நாட்டின் தேசிய பிரச்சனைக்கு நிலையான தீர்வொன்றை காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீவிரவாதம் தொடர்பான மேலும் சில ரகசிய ஆவணங்கள் ரெயிலில் அனாதையாக கிடந்தன: இங்கிலாந்தில் மீண்டும் அதிர்ச்சி
Next post போர் விமானம் மீது பறக்கும் தட்டு மோதியதா?: காயத்துடன் விமானி உயிர் தப்பினார்