ஷார்ஜாவில் 13-வது மாடியில் இருந்து குதிப்பதாக இந்திய பெண் தற்கொலை மிரட்டல்; போலீசார் தடுத்து நிறுத்தினர்

Read Time:1 Minute, 18 Second

ஷார்ஜாவில் பெற்றோருடன் வசித்து வரும் 18 வயது இந்திய பெண், தற்கொலைக்கு முயன்றார். அவர் தான் குடியிருக்கும் 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மீது நின்று கொண்டு கீழே குதிக்கப் போவதாக மிரட்டினார். இதனால் கீழே பெரும் பரபரப்பு ஏற்பட்டு, கூட்டம் திரண்டது. அப்பெண்ணின் பெற்றோர்கள், `கீழே குதித்து விடாதே’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையே, தகவல் கிடைத்து போலீசாரும், சி.ஐ.டி. அதிகாரிகளும் விரைந்து வந்தனர். போலீசார் அப்பெண்ணுடன் பேசியபடியே அவரது கவனத்தை திசை திருப்பினர். அந்த நேரத்தில் சி.ஐ.டி. அதிகாரிகள், பின்பக்கமாக வந்து அப்பெண்ணை பத்திரமாக பின்னால் இழுத்து அவரது தற்கொலை முயற்சியை முறியடித்தனர். குடும்ப பிரச்சினையில் அப்பெண், தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குண்டுத் தாக்குதல்களுக்கு மலையக நகரங்களை குறிவைக்கும் புலிகள்
Next post ஆப்கன் சிறை மீது தாக்குதல்