கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!
திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை.இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது.இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை காட்டிலும் மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயலாகும்.
இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்ற கூட உறவு ஆகும். இன்று இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகி விட்டது. முன்பு இந்த உறவுகள் கிசுகிசுச் செய்திகளாக மட்டுமே இருந்தன.இப்போதோ நாளிதழ்களுக்குத் தீனி போடுகின்ற அளவிற்கு வெளிப்படையாகவே நடைபெறுகின்றன.முன்உ இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டனர்.
இப்போது வெளியில் தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.கள்ளக்காதல் ஆபாசம் அசிங்கம் என்ற நிலைகளையும் தாண்டி வன்முறையில் முடிகின்றது. முந்தைய கணவன் மனைவியைக் கொல்லுதல், கள்ளக் காதலனையோ காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல்,உறவுக்கு தடையாக இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதால் என்ற அளவிற்கு நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது.அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக பல பெண்களின் வாழ்வு பாழாகிப் போகின்றது. வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே!
அவமானம் தாங்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதால் எதுமறியா குழந்தைகள் அனாதைகளாகி நடுத்தெருவில் நிற்கின்றன.மக்களிடையே ஒழுக்க மாண்புகள் குறைந்து போனதே இதற்குக் காரணம் என்று ஒற்றை வரியில் இந்தப் பிரச்சனையை அடக்கிவிட முடியாது.
பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. பணப்பெருத்தமும், ஜாதகப் பொருத்தம்,குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப் பொருத்தம் பார்க்கின்றார்கள் ஆனால் மனப் பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார்.
படிப்பு,அறிவு,அழகு, பொழுதுபோக்கு,வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை,கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர்.இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள்.
அப்டிப்பு, பதவி, வருமானம், திறமை,நோய்கள் ஆகியவற்றை மறைத்து தவறான தகவல்களைத் தந்து முடிக்கப்பட்ட திருமணங்களும் சண்டை,சாச்சரவில் முடிகின்றன. இத்தகைய திருமணம் விவாகரத்தில் முடியாலம் அல்லது கள்ள உறவிற்கு இட்டுச் செல்லலாம்.
வறுமையும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லாத குடும்பங்களும் இத்தகைய தவறுக்கு ஆளாகின்றன.குடிகாரக் கணவன், வேலைக்குச் செல்லாத ஊதாரிக் கணவன் இவர்களால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு ஒருதுணையிடம் செல்கின்றனர்.தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு.
அன்பு ஆதரவு இல்லாத உறவுகள்,சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர்.மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன இவர்கள் சட்டப்பூர்வமான மணவிலக்குப் பெற விரும்பினாலும் அது மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது.கால தாமதம் ஆகிறது என்பதாலும் இன்னும் சிலர் குடும்ப கெளரவம், குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மணவில்லக்குப் பெற முயற்சி செய்வதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன.
திருமணங்களை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடுவதால் தமது ஆசைகளுக்கு வடிகாலாக ஏற்கனவே திருமணமான ஒருவனோடு ஒருத்தியோடு உறவு கொள்கின்றனர்.
கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவுகள் உருவாகின்றன. நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன என்று சொல்ல முடியாது.மற்ற குடும்பங்களை விட இந்தக் குடுமபங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்தில் மிகவும் பிடிப்புள்ளவர்கள் ஒழுக்கக்கேட்டிலிருந்து தம்மைக் காத்துக் கொள்கின்றனர். ஆனால் பலவகையான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
ஆபத்தான இணைய நட்பு வீட்டுக்குவீடு கணினி கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இதன் வழி நாம் பெறும் அனுபவங்கள் போற்றத்தக்கதாய் இல்லை.ஆர்குட்டில் ஆரம்பித்து, பேஸ்புக்,டிவிட்டர்- என நீளும் இணைய தளத் தொடர்புகள் ஏழுகடல்,ஏழுவானம் தாண்டி பத்திரமாகப் பாதுகாக்கப்படும் இராஜகுமாரியைக்கூட எளிதில் வசப்படுத்தும் நவீன சிலந்தி வலையாக அமைந்துள்ளது இப்படி இன்றைய அறிவியல் பொறிகளின் மீது நாம் பழியை அடுக்கியுரைத்தாலும் சில பல தவறுகள் நம்பக்கம் இருப்பதையும் சுயபரிசோதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்ஆ
ண்களும் பெண்களும் எவ்விதத் தடையுமின்றி நெருங்கிப் பழகுவதாலும் ஆபத்துகள் விளைகின்றன. வீட்டிலோ,அலுவலகத்திலோ சந்தித்து சில வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம் என்ற நிலையைத் தாண்டும் போது விளைவுகள் மோசமாகின்றன.
கூட்டுக் குடும்பங்களில் இந்த ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன. உறவுகளில் ஒரு இடைவெளி நிர்ணயம் செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். கணவரின் நண்பர்களிடமும் இடைவெளி விட்டே தேவை ஏற்பட்டால் மட்டுமே பேச வேண்டும்.
வீட்டிற்கு வெளியே கள்ள உறவுக்கான வாய்ப்புகள் அதிகம்.இதில் முதலிடம் வகிப்பது வேலை பார்க்கும் அலுவலகங்களே! எவ்வித தவறான எண்ணமும் இல்லாமல் சாதாரணமாகப் பழக ஆரம்பித்துப் பின்னர் தனது கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் பரிமாறுவதுடன் நாளடைவில் குடும்ப ரகசியங்களைப் பேச ஆரம்பித்து விடுகின்றனர். தீய எண்ணம் கொண்டவர்கள் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர்.
அலுவலகத்தில் நடக்கும் விழாக்கள், பார்ட்டிகள், மதுபரிவர்த்தனைகள் நடைபெறும் நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள் ஆகியவையும் கூடா உறவுக்கு வழிவகுக்கும் செயல்காளகும்.
அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களை பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றின் மூலம் ஆசைகாட்டியும், இணங்க மறுப்பவர்களை அச்சுறுத்தியும் தமது இச்சைகளுக்கு அடிபணிய வைத்த சம்பவங்களும் சில வேளைகளில் பெண்களே உயர் அதிகாரிகளை வளைத்துப் போட தங்களையே தரத்துணிந்து விடுகின்ற சம்பவங்களும் மீடியாவில் அடிக்கடி அடிபட்ட செய்திகள்.
வறுமை வேலை வாய்ப்பின்மை காரணமாக தவறான உறவுகளில் சில பெண்கள் ஈடுபடுகின்றனர்.இன்னும் சிலரோ ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு தமது கற்பைக் கொடுத்து விடுகின்றனர்.சிலர் தனது துணையை பழிவாங்குவதற்காகவும் கள்ள உறவை நாடுகின்றனர். தனது துணையின் மீதுள்ள கோபத்தை இவ்விதம் வெளிப்படுத்துகின்றனர்.
தீர்வுகள்கு
டும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒரு போதும் கிட்டாது. தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்களை மூடர்கள் எனலாம்.
Average Rating