கொடநாட்டில் ஜெ-சுவாமி திடீர் சந்தி்ப்பு

Read Time:2 Minute, 21 Second

கொடநாடு எஸ்டேட்டில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார். ஊட்டி கொடநாடு எஸ்டேட்டில் தோழி சசிகலாவுடன் மிக நீண்ட ஓய்வு எடுத்து வருகிறார் ஜெயலலிதா. கோடை காலத்தின் பெரும்பாலான பகுதியை அவர் ஊட்டியில் தான் செலவிட்டார். அங்கிருந்தபடியே தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு வருகிறார். இப்போதும் அங்கு தான் இருக்கிறார். இந் நிலையில் அவரை சுப்பிரமணியம் சுவாமி இன்று திடீரென சந்தித்துப் பேசினார். திமுக-பாமக மோதல் வலுத்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுவாமி, திமுகவினரின் செயல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் 20க்கும் மேற்பட்ட ‘‌டேப்’புகள் என்னிடம் உள்ளன. அவற்றை விரைவில் வெளியிடுவேன். ஜெயலலிதாவுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசினேன் என்றார். சில வாரங்களுக்கு முன்பே சுவாமியை கொடநாட்டுக்கு அழைத்திருந்தார் சுவாமி. அவரும் கிளம்பிப் போனார், ஆனால் அந்தச் சந்திப்பை விரும்பாத மன்னார்குடி தரப்பு இடையில் புகுந்து விளையாடவே அப்பாயின்மெண்ட் கேன்சல் என்று சுவாமிக்கு தகவல் வந்ததாம். இதையடுத்து நொந்து போய் திரும்பி வந்தார் சுவாமி என்கிறார்கள். இந் நிலையில் இன்று அவரை அழைத்துப் பேசியிருக்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா-பாஜக கூட்டணிக்கான முயற்சிகளில் சுவாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி ஒன்று கூறுகிறார் பிரதமர் வேறொன்று கூறுகிறார் சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை அரசிடம் இல்லை -ஐ.தே.கட்சி பொதுச்செயலாளர்
Next post உலகத்தமிழர் இயக்கத்திற்கு கனடாவில் தடை!