டெல்லி-மும்பை விமானத்தில் இந்தி நடிகையிடம் செக்ஸ் சில்மி‌ஷம்..!!

Read Time:2 Minute, 56 Second

அமீர்கான் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘டங்கல்’ படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்து இருப்பவர் சாய்ரா வாசிம். 17 வயதாகும் இளம் நடிகையான இவர், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

தற்போது அவர் ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் சமீபத்தில் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தார்.

அப்போது அவரது இருக்கையில் பின்புறம் அமர்ந்து இருந்த பயணி ஒருவர் நடிகை சாய்ரா வாசிமின் பின்புறத்தில் காலால் இடித்து செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். சாய்ரா வாசிம் அரைதூக்கத்தில் இருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்ததால் விளக்குகள் அணைக்கப்பட்டு சிறிய அளவில் வெளிச்சம் தரும் விளக்கு மட்டும் எரிந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயணி செக்ஸ் தொந்தரவு கொடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் எல்லை மீறினார். ஒரு கட்டத்தில் முதுகு பகுதி வரை காலை நீட்டி தொந்தரவு செய்தார்.

நடிகை பலமுறை எச்சரித்தும் அந்த பயணி காலை இருக்கையில் இருந்து எடுக்காமல் இடையூறு செய்து வந்தார். அதனால் நடிகை சாய்ரா வாசிம் பயணி கால் வைத்திருப்பதை தனது செல்போனில் படம் பிடித்து விமான ஊழியர்களிடம் ஆதாரத்துடன் புகார் செய்தார்.

அந்த தனியார் விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட பயணியை எச்சரித்தது. இந்த சம்பவத்தால் நடிகை சாய்ராவாசிம் மனவேதனை அடைந்தார். விமான நிறுவனம் பயணி மீது போலீசில் புகார் செய்தால் பெயர் கெட்டுவிடும் என்று மறைத்து விட்டது.

இதை அறிந்து நடிகை சாய்ரா வாசிம் தனது இன்ஸ்டாகிராமில் செல்போனில் எடுத்த படங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தி உள்ளார். விமானத்தில் நடந்த இந்த சம்பவத்தை சக பயணிகள் தட்டிக்கேட்க முன்வரவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரப்போவது பெண் வேட்பாளர்களா, ‘டம்மிகளா’?..!! (கட்டுரை)
Next post மக்களுக்கு சுரணை இருக்கிறதா? என்பதை அறிய இந்த ஒரு வீடியோவே போதும்..!!