உணவில் பணிப்பெண் செய்த முகம்சுழிக்கும் செயல்… விமானத்தில் அரங்கேறிய கூத்து..!! (வீடியோ)

Read Time:2 Minute, 17 Second

சீனாவில் பறக்கும் விமானத்தில் பணிப்பெண் ஒருவர் பயணிகளுக்கான உணவை ரகசியமாக எடுத்து உண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.பயணிகளுக்கான உணவை திருட்டுத்தனமாக எடுத்து உண்ட குறித்த விமான பணிப்பெண்ணை தொடர்புடைய நிறுவனம் தற்போது பணி நீக்கம் செய்துள்ளது.

சீனாவின் Urumqi Air விமான சேவை நிறுவனத்தின் விமானத்திலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.சீனாவில் உள்ள Yinchuan நகர விமான நிலையத்தில் தரையிறங்கும் 45 நிமிடங்களுக்கு முன்னர் குறித்த பணிப்பெண்ணின் நடவடிக்கையை சக ஊழியர் ஒருவர் படம் பிடித்துள்ளார். படம் பிடிக்கப்படுவது தெரிந்தும் அவர் உணவை அருந்தியுள்ளார்.

இதனிடையே இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனையடுத்து குறித்த பணிப்பெண்ணின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பிய இணையதள பயன்பாட்டாளர்கள், விமானத்தில் பரிமாறப்படும் உணவின் சுகாதாரம் குறித்தும் சந்தேகம் எழுப்பினர்.

இந்த நிலையில் தொடர்புடைய விமான சேவை நிறுவனத்தின் பார்வைக்கு இந்த காணொளி கொண்டுசெல்லப்பட்டது. தொடர்ந்து குறித்த பணிப்பெண்ணை அழைத்து விளக்கம் கேட்ட நிர்வாகம், அதில் திருப்தியடையாமல் அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

மேலும் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான பணிப்பெண் எடுத்து சாப்பிட்ட உணவானது பயணிகள் சாப்பிட்ட மீதம் எனவும், மாறாக பயணிகளுக்கு வழங்குவதற்காக அல்ல எனவும் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரகம் பாதிக்கப்பட்டதை உணர்த்தும் அறிகுறிகள்..!!
Next post ஹீரோயினாக மறைந்த பிரபல நடிகையின் மகள்! புதுவரவு..!!