படைப்பாளிகளை அச்சுறுத்த கூடாது: ஷாகித் கபூர்..!!

Read Time:2 Minute, 34 Second

இந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள படம், ‘பத்மாவதி’. ஷாகித் கபூர், ரன்வீர் சிங் கதாநாயகர்களாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் வரலாற்றை திரித்து கூறி இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும், நடிகை தீபிகா படுகோனேக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதோடு, தணிக்கை குழுவிடம் இருந்து சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஆவதால், பத்மாவதி படம் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இந்த சூழலில், நடிகர் ஷாகித் கபூர் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘உத்தா பஞ்சாப்’ ஒன்றும் சரித்திர பின்னணி வாய்ந்த கதை அல்ல. ஆனாலும், அந்த படத்துக்கு எதிராகவும் சர்ச்சை எழுந்தது. படைப்பாளிகளை அச்சுறுத்த கூடாது. ஏனென்றால், குறுகிய மனப்பான்மை இருந்தால், படைப்புகளை உருவாக்க முடியாது.

உங்களை சுதந்திரவாளியாக நினைக்கும் வரையில், உங்களால் எதையும் படைக்க இயலாது. கலை என்பது சமூகத்தின் பரந்த அளவிலான பிரதிபலிப்பு. ஜனநாயக நாட்டில், உங்கள் கருத்துகளை சுதந்திர உணர்வுடன் வெளிப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்வாறு ஷாகித் கபூர் தெரிவித்தார்.

மேலும், பத்மாவதி பட விவகாரத்தில், தங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் ஷாகித் கபூர் நன்றி கூறினார்.

நடிகை கங்கனா ரணாவத் கூறும்போது, “திரையுலகினருக்கு ஒரு பிரச்சினை என்றால், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவாகவோ சேர்ந்து நம்மால் உதவ முடியும் என்றால், நிச்சயமாக உதவ வேண்டும். நமது சக நடிகர்களுக்கு எப்போதும் நமது முழு ஆதரவு உண்டு” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில் தமிழ் காப்பிலியின் திருவிளையாடல் திருக்குறள் பேசினார்..!! (வீடியோ)
Next post இரக்கமின்றி வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற உரிமையாளர் மீது வழக்கு – வைரலாகும் வீடியோ..!!