சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் சாவகச்சேரியில் மீட்பு

Read Time:1 Minute, 7 Second

சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் நேற்று முற்பகல் யாழ்போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்திருக்கின்றனர் தென்மராட்சி தெற்கு கோயிலாக்கண்டியிலுள்ள ஐயப்பன் கோயிலடியில் நேற்றுமுற்பகல் 10.00 மணியளவில் மீட்கப்பட்ட இந்த சடலம் 25-30 வயதிற்கு உட்பட்ட ஒருவருடையது என்றும் எனினும் அந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன சடலமாக மீட்கப்பட்டவர் இருதினங்களுக்கு முன் சுடப்பட்டிருக்கலாம் என்று யாழ்போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை மாணவர்கள் ஐவர் ஹெந்தலை கடலில் மூழ்கிப் பலி
Next post சிலாபத்தில் 11 பேர் கைது