தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண நாடாளுமன்ற அதிகாரத்தை புதிய அரசிடம் ஒப்படைக்க! – ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் சபையை கலைக்கவும் கோரிக்கை

Read Time:3 Minute, 18 Second

தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தை உடனடியாக புதியதொரு அரசிடம் ஒப்படைக்குமாறு எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார.; நாடாளுமன்றத்தை கலைக்கும் திகதியை தீர்தமானிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக அரசு தம்முடன் பேச முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது தேசிய பிரச்சனை தீர்க்கப்படாமல் நாடு அழிந்துகொண்டிருக்கும் நிலையில் அரசு மாகாணசபைகளை கலைத்து தேர்தல்களை நடத்த தீர்மானித்திருக்கிறது இத்தேர்தல்கள் மூலம் எந்த பிரச்சனையும் தீரப்போவதில்லை மேலும் மேலும் விலைவாசிதான் அதிகரிக்கும் தேசிய பிரச்சனைகளை தீர்தால்தான் எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்க முடியும் அவ்வாறு தேசிய பிரச்சனையை தீர்க்க மாகாணசபைகளை துண்டுதுண்டாக கலைத்து தேர்தல்கள் நடத்துவது பொருத்தமானதல்ல நாடாளுமன்ற அதிகாரம் புதிய அரசுக்கு வழங்கப்படுவதன் மூலமே தேசிய பிரச்சனையை தீர்க்க முடியும் அரசு உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் கலைப்பதற்கான திகதியை தீர்மானிக்க அரசு எம்முடன் பேச்சு நடத்தவேண்டும் இந்த அரசால் ஒருபோதும் தேசிய பிரச்சனையை தீர்க்க முடியாது தேசிய பிரச்சனையை தீர்ப்பதற்காகவே யுத்தத்தில் ஈடுபடுகிறோம் என யுத்தத்தை காரணம் காட்டி பொருட்களின் விலையை அதிகரிக்கிறது. பிழையான முறையில் இடம்பெறும் இந்த யுத்தம் பற்றிய உண்மைகள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டால் ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுகின்றனர் கடத்தப்படுகின்றனர் தாக்கப்படுகின்றனர் இவ்வாரான ஊடகவியலாளர்கள் தேசத்துரோகிகள் என அரசு அறிவித்துள்ளது. தொழிற்சங்க போராட்டங்களை நடத்துபவர்களை துரத்தி அடிக்கிறது. இவ்வாரான செயற்பாடுகளால் நல்லதொரு நாட்டை உருவாக்க முடியாது. இந்த அரசை கவிழ்த்து நல்லதொரு அரசை உருவாக்கம் திட்டத்தில் நாம் இப்போது உள்ளோம் இதற்கான எமது போராட்டம் தீவிரமாகுமே தவிர குறையாது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாப் பகுதியில் இரண்டு படையினர் சுட்டுக்கொலை
Next post பாடசாலை மாணவர்கள் ஐவர் ஹெந்தலை கடலில் மூழ்கிப் பலி