்பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் காதல் மனைவி கார்லா ப்ரூனியின் ‘போதை’ ஆல்பம்!

Read Time:3 Minute, 22 Second

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியை, ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துக்களுடன் ஒப்பிட்டு அவரது காதல் மனைவி கார்லா ப்ரூனி பாடல் பாடியுள்ளார். இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகியான கார்லா ப்ரூனி. இப்போது இவர் பிரான்ஸ் அதிபர் சர்கோஸியின் மனைவி. இருவரும் காதலித்து சமீபத்தில் கரம் பிடித்தனர். சர்கோஸி – ப்ரூனி காதல் செய்திகளை வெளியிடாத உலக பத்திரிகைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு படு விறுவிறுப்பானது இவர்களின் காதல் கதை. கல்யாணமான பின்னரும் கூட தொடர்ந்து செய்திகளில் முதன்மையான இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார் ப்ரூனி. அவரது முழு நீள நிர்வாணப் படம் ஒன்றை ஒரு பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ப்ரூனி ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். அஸ் இஃப் நத்திங் ஹேப்பன்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் ப்ரூனியின் 30 காதலர்கள் குறித்து 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் சர்கோஸியை ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துக்களுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளார் ப்ரூனி. ஒரு பாடலில், தனது முன்னாள் காதலர்களான மைக் ஜேக்கர், எரிக் கிளாப்டன் குறித்து புகழ்ந்து பாடியுள்ளார் ப்ரூனி. அதில் வரும் ஒரு வரி … நாற்பது வயதானாலும் நான் ஒரு குழந்தை தான். 30 காதலர்கள் இருந்தாலும் நான் இன்னும் குழந்தை தான்… என்று போகிறது. மா கேம் என்று பெயரிடப்பட்ட பாடலில், தனது காதல் கணவரான சர்கோஸியை, போதைப் பொருட்களுடன் ஒப்பிட்டுப் புகழ்ந்துள்ளார் ப்ரூனி. …. நீ எனது போதை. ஆப்கனின் ஹெராயினை விடவும், கொலம்பியன் ஒயிட்டை விடவும், நீ அபாயகரமான போதையைக் கொண்டவன். உன்னை நான் உருட்டுகிறேன், புகைக்கிறேன் … என்று போகிறது அந்தப் போதைப் பாட்டு. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தப் பாட்டை 2 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ளார் ப்ரூனி. அப்போது அவருக்கும், சர்கோஸிக்கும் இடையே பழக்கமோ, நெருக்கமோ ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 21ம் தேதி இந்த ஆல்பம் விற்பனைக்கு வருகிறது. இந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை, ரஃபேல் என்தோவன் என்பவர் எழுதியுள்ளார். இவர் வேறு யாருமல்ல, ப்ரூனியின் முன்னாள் கணவர். இப்பவே கண்ணைக் கட்டிக்கிட்டு வருதா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு!
Next post அடையாள அட்டை வைத்திராத 22பேர் கண்டியில் கைது