கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?..!!

Read Time:2 Minute, 30 Second

மசக்கைத் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்குக் குமட்டல் ஏற்பட்டு சமாளித்துக்கொள்வார்கள். அறிகுறிகள் காலையிலும், வேறு சிலருக்கு பிற வேளைகளிலும், சிலருக்கு நாள் முழுவதும் நீடிக்கும். இந்த அறிகுறிக்கு, கர்ப்பகாலத்தின் தொடக்கத்தில் ஏற்படும். ஹார்மோன் மாறுபாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதிலிருந்து நிவாரணம் பெற, பின்வரும் குறிப்புகளைப் பின்பற்ற முயற்சிக்கலாம்.

தினமும் மூன்று வேலை சாப்பிடுவதற்குப் பதில், குறுகிய இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். இத்தகைய சின்னச்சின்ன மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மசக்கையை சமாளிக்கலாம்.

காலையில் எழுந்ததும் குமட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், வறுத்த, உலர்ந்த உணவு அல்லது பிஸ்கட் போன்றவற்றை எழுந்திருக்கும் போதே சாப்பிடுங்கள்.

குமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிருங்கள். உங்களுக்கும், பிறருக்கும் ஏற்ற உணவாகத் தேர்தெடுத்து தயாரித்துக் கொடுங்கள். அசௌகரியத்தைத் தராத, அதேசமயம், உடல் நலனுக்கு ஏற்ற உணவுப்பொருள்களைச் சாப்பிடுங்கள்.

குமட்டலைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால்தான் அது அதிகமாகும். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள். குமட்டல் குறையும்.

அதிகமாக வாந்தி வருவது அரிதுதான். அது நீடிக்குமானால் நீரிழப்பு மற்றும் எலெக்ட்ரோலைட் சமசீரின்மை உண்டாகலாம். உடனே மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.

கர்ப்பகாலத்தின் முடிவு வரை குமட்டல் தொடர்ந்தால், ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் செல்லுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் சுயஇன்பம் காண்பது…!!
Next post தானா சேர்ந்த கூட்டத்தை திருப்பி அனுப்பிய விக்னேஷ் சிவன்..!!