குடித்த தாய்-போதையுடன் பிறந்த குழந்தை!

Read Time:2 Minute, 21 Second

பிரசவத்திற்கு முன்பு, பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக கர்ப்பிணிப் பெண் மது அருந்தியதால், அவருக்குப் பிறந்த குழந்தை குடி போதையுடன் பிறந்தது. அந்தத் தாய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சர்ச்சையில் சிக்கியுள்ள அந்தப் பெண் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 38. லண்டனில் வசித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக மது அருந்தியுள்ளார். பிரசவத்தின்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையைப் பார்த்த டாக்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அது மது போதையுடன் பிறந்ததே. உடனடியாக குழந்தைக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, குழந்தையின் ரத்தத்தில், 2.9 கிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருந்தது தெரியவந்தது. அவரது தாயின் ரத்தத்தில், ஆயிரத்திற்கு 1.2 கிராம் என்ற அளவில் ஆல்கஹால் இருந்தது. இந்த விபரீதத்தால் குழந்தையின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது குழந்தைக்கு எந்தப் பிரச்சினை இல்லை என்றாலும் கூட, எதிர்காலத்தில் என்ன பின் விளைவுகளை ஏற்படுத்துமோ என்று டாக்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தற்போது அந்தப் பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குழந்தையின் எதிர்காலத்தையும், ஆரோக்கியத்தையும் பாழ்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அது நிரூபிக்கப்பட்டால் அப்பெண்ணுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாவை மடக்கி பிடிப்பதற்காக முல்லையில் படை நடவடிக்கையாம்- இராணுவத்தளபதி தகவல்
Next post அரசியலில் குதிக்கிறார் பெனாசிரின் மகள்; தாயின் இலட்சியத்தை நிறைவேற்ற சபதம்