படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித், விக்ரம் படங்கள்..!!
விஜய், அஜித்குமார், விக்ரம் ஆகியோர் புதிய படங்களில் நடிக்க தயாராகி உள்ளனர். இதர நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. இவற்றின் படப்பிடிப்புகளை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. தற்போது மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இது விஜய்க்கு 62-வது படமாகும். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதாநாயகியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல் பிரீத் சிங்கை பரிசீலித்தனர்.
சோனாக்சி சின்கா பெயரும் அடிபட்டது. தற்போது கீர்த்தி சுரேசிடம் பேசி வருகிறார்கள். பைரவா படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். துப்பாக்கி போன்று அதிரடி கதையம்சத்தில் தயாராகிறது.
அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் வந்தன. இப்போது 4-வது முறையாகவும் இணைந்துள்ளனர். முந்தைய விவேகம் படத்துக்கு இரண்டு விதமான விமர்சனங்கள் இருந்தன. எனவே சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க மாட்டார் என்று பேசப்பட்டது.
முன்னணி இயக்குனர்கள் பலர் அஜித் படத்தை இயக்க கதைகளுடன் தயாராக இருந்தனர். ஆனாலும் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க அஜித்குமார் முன்வந்துள்ளார். இந்த படத்துக்கு விஸ்வாசம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதில் வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் இல்லாமல் கருப்பு நிறை தலைமுடியில் இளமையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் பேசி வருகிறார்கள்.
விக்ரம் ‘ஸ்கெட்ச்’ என்ற படத்தை முடித்து விட்டு சாமி-2 படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ஸ்கெட்ச் படம் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. சாமி-2 படத்தை ஹரி இயக்குகிறார். 2003-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சாமி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகிறது. இந்த படத்தில் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் திரிஷா கதை பிடிக்கவில்லை என்று ஒதுங்கி விட்டார். அவரிடம் சமரச பேச்சு நடத்தி மீண்டும் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அவர் மறுத்தால் வேறு கதாநாயாகியை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating