கர்ப்பகாலத்தில் ஹார்மோன் மாறுதலால் ஏற்படும் முதுகுவலியும் – தீர்வும்..!!

Read Time:3 Minute, 51 Second

கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதால் வயிற்றின் அழுத்தம் தாங்காமல், கர்ப்பிணிகளுக்கு உட்கார்வது, நிற்பது, நடப்பது என எல்லாமே சிரமமாகும். மல்லாந்தோ ஒருக்களித்தோ படுக்க வேண்டியிருப்பதால் முதுகுப் பகுதிக்கும் கூடுதல் அழுத்தம் உண்டாகி வலி ஏற்படும். தவிர ஹார்மோன் மாறுதல்களும் கர்ப்பகால முதுகுவலியை அதிகரிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச்சுமக்கும் பெண்களுக்கு இந்த வலி சற்றே அதிகமாக இருக்கும்.

சகித்துக் கொள்ளும்படியான வலி என்றால் பயப்படத் தேவையில்லை. சின்னச்சின்ன விஷயங்களின் மூலமே வலியைக் குறைத்துக் கொள்ளலாம். அப்படிச் சில வழிகள் இங்கே…

* இரவில் வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டுத் தூங்கச்செல்வது வலியிலிருந்து ஓரளவு நிவாரணம் தரும். தவிர ஆப்பு வடிவிலான தலையணையை வயிற்றுப் பகுதிக்கு இதமாக வைத்தபடி ஒருக்களித்துப் படுக்கலாம்.

* கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் தூக்குகிற பொருள்களில் கவனம் இருக்கட்டும். அதிக கனமான பொருள்களைத் தூக்க முயற்சி செய்ய வேண்டாம். கீழே உள்ள பொருள்களைத் தூக்க வேண்டியிருந்தால், அப்படியே முதுகை வளைத்துக் குனிந்து எடுக்காமல், மண்டியிட்டு உட்கார்ந்து, அந்தப் பொருளை மார்போடு அணைத்துத் தூக்குவது முதுகுவலியைத் தவிர்க்கும்.

* அடிமுதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தமில்லாத மிதமான மசாஜ் செய்வது வலியின் தீவிரம் குறைக்கும். மசாஜ் செய்கிறபோது சூடான எண்ணெய் மற்றும் அரோமா ஆயில்களை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

* நீண்ட நேரம் நின்றபடிச் செய்கிற வேலைகளைத் தவிர்க்கவும். அதைத் தவிர்க்க முடியாதபோது, ஒருகாலை சற்று உயர்த்தி ஸ்டூல் அல்லது உயரம் குறைவான பலகையின்மேல் வைத்துக் கொள்ளவும். உட்காரும்போதும் உங்கள் இருக்கையில் முதுகு முழுவதுமாகச் சாய்ந்திருக்கும்படிப் பார்த்துக்கொள்ளவும். முதுகுப் பகுதிக்குத் தலையணை வைத்தபடியும் உட்காரலாம்.

* மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொண்டு, எளிமையான யோகா பயிற்சிகளைச் செய்யலாம். கர்ப்பிணியின் தனிப்பட்ட உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கேற்ற சரியான பயிற்சிகளை மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.

* வயிறு பெரிதாகும் போது உடலின் பேலன்ஸ் மாறும். ஹை ஹீல்ஸ் காலணிகள் அந்த பேலன்ஸை மேலும் மாற்றி, முதுகுவலிக்குக் காரணமாகும். தடுக்கி விழவும் கால்கள் இடறவும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை மகிழ்விக்க என்ன செய்யவேண்டும் ?..!!
Next post விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்..!!