சொந்த ஊரில் நூலகம் கட்டும் சினேகன்..!!

Read Time:1 Minute, 53 Second

கவிஞர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது; அதில் வென்றால் கிடைக்கும் ரூ 50 லட்சத்தை வைத்து சொந்த ஊரில் நூலகம் கட்டுவேன் என்று கமல்ஹாசனிடம் கூறினார்.

ஆனால் வெற்றிபெறவில்லை. என்றாலும், சொன்னபடி சினேகன் அவருடைய சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் புதுக்காரிப்பட்டியில் நூலகம் அமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார். இதற்கு ‘மக்கள் நூலகம்’ என்று பெயரிட்டுள்ளார். பொது மக்கள் உதவியுடன் தொடங்க இருக்கும் இந்த நூலக பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை இப்போது சினேகன் தொடங்கி இருக்கிறார்.

ரூ1 கோடி செலவில் அமைய இருக்கும் இந்த நூலகத்துக்காக, நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கி இருக்கிறார். இந்த நூலகத்தில் 25 அறிஞர்களை கொண்டு தேர்வு செய்யப்படும் நூல்கள் வைக்கப்படுகின்றன. ஆராய்ச்சி நூல்கள், பழமையான நூல்கள் உள்பட ஒரு லட்சம் நூல்கள் வைக்கப்பட இருக்கின்றன.

இதுதவிர மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். மக்கள் நூலகத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் இசை அமைப்பாளர்கள் தாஜ்நூர், சத்யா, இயக்குனர் வேலுபிரபாகரன், நடிகர் வையாபுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலா மாஸ்டரின் கோபம்… ஜுலியின் அழுகை!.. அரங்கத்தில் நடந்தது என்ன?..!! (வீடியோ)
Next post ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’..!!